பக்கம்:மறைமலையம் 22.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

251

வடசொற்கள் விரவியிருத்தல் இச்சிறு பகுதிகளைக் கொண்டு ஒருவாறு துணியப்படும். ஆனாற், சமயப் பொருள் கலவாத திருவாசகப் பகுதிகள் சிலவற்றில் நூற்றுக்கு இரண்டு மூன்று வடசொற்களும், வேறு சிலவற்றில் முந்நூற்றுக்கு ஒரு வடசொல்லும் காணப்படு கின்றன. ஆகவே, 'திருவாசகம்' முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க முதன்மை யாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம்; இவற்றுள் முந்நூற்று எழுபத்துமூன்று வடசொற்கள் இவற்றை வகுத்துப் பார்த்தால் நூறுசொற்கள் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற்களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே, திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின வென்பது புலப்படும்; மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த மற்றொரு நூலாகிய திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப் பொருள் மிக விரவாமற் பெரும் பாலுந் தமிழின் அகப் பொருளே விரவிநிற்றலால் அதன் கண் நூற்றுக்கு ஐந்து விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. 'மணிமேகலை', 'சிலப்பதிகாரம்' இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னெழுந்த சங்கத்தமிழ் நூல்களுள்ளும் பழைய பகுதிகளுள் பகுதிகளுள் ஐந்நூற்றுக்கு ஐந்நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும். அங்ஙனமல்லாத பிற்பகுதிகளுள் நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும் வடசொற்கள் அரிதாய்க் காணப்பட, 'மணிமேகலை' காலத்தில் நூற்றுக்கு நாலைந்து விழுக்காடும். அதற்குப்பின் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரையிற் றோன்றிய நூல்களில் நூற்றுக்கு ஆறு, ஏழு, எட்டு விழுக்காடும் வடசொற்கள் வரவர மிக்குக் கலந்து காணப்படுகின்றன.

மிகப்

‘கல்லாடம்’ என்னும் நூலிலும் நூற்றுக்கு ஆறு, ஏழு விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுதலால், அஃது ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே எழுந்த நூலாதல் தெற்றென விளங்கும். மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் ஓங்கி விளங்கிய புத்தசமயம் மூன்றாம் நூற்றாண்டி னீற்றிலிருந்து தன் ஒளிமழுங்கி யொடுங்க, அதற்குப் பின் தலை தூக்கிய சமண சமயமும் வடநாட்டிலிருந்து வந்ததொன்றாகையால் அதன் வழியே வடசொற்கள் பின்னும் பின்னும் மிகுதியாய்ப் புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/284&oldid=1587731" இலிருந்து மீள்விக்கப்பட்டது