பக்கம்:மறைமலையம் 22.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

  • மறைமலையம் - 22

என்று ஒரு சாரணன் கிள்ளி வளவனுக்குக் கூறியதாகக் காட்டுதல் கொண்டு, அச் சோழமன்னன் கடல்கோட்பட்ட தனது காவிரிப்பூம்பட்டினத்தைவிட்டு, நாகபட்டினத்தைத் தனது தலைநகராக்கி கொண்ட பொழுது, பல தீவுகளிலுந் தேடி எதன்கணிருந்தோ அம் மகனைக் கண்டு காணர்ந்து அவனுக்குத் தன்னரசிற் பாதி கொடுத்தானாதல் வேண்டு மென்பது உய்த்துணரப்படும்; இதற்கு நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையிற் கூறிய வரலாற்றுரையும் சான்று

பகருமென்க.

ரு

இவ்வாறு வாறு வடக்கேயுள்ள வ வடுகரில் ஒரு சாராரான பல்லவர்க்கும் தெற்கேயுள்ள சோழர்க்கும் தொடர்புண்டாகி அத் தொடர்பினாற் றோன்றிய ஓர் அரசன் இரு மரபினர்க்கும் ரு பொதுவாய்க் காஞ்சிமாநகரிற் செங்கோல் செலுத்தப் புக்க காலந்தொட்டு, வடுகநாட்டிலிருந்த வடுகர் இத் தமிழ்நாட்டில் ஏதொரு தடையு மின்றி வருதற்கு இடம் பெற்றனர். இதற்குமுன் இத் தமிழ்நாட்டின்கண் வருதற்பொருட்டு வடுகமன்னர் எவ்வளவோ முயன்று பார்த்தும், அஞ்ஞான்றெல்லாஞ் சோழ வேந்தர்கள் பேராற்றலுடையராய் விளங்கினமையின் அவர்களால் அஃது இயலாதாயிற்று. இன்னொருகால் வடுக மன்னர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தபோது சோழன் இளஞ்சேட்சென்னி அவர்களை வென்று

துரத்தினனென்பது.

“தென் பரதவர் மிடல் சாய

வட வடுகர் வாளோட்டிய

தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்

கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்

நற்றார்க் கள்ளின் சோழன்'

995

என்னும் புறப்பாட்டான் நன்கறியப்படும். இச்செய்தி.

"விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி

குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்

செம்புறழ் புரிசைப் பாழி நூறி

வம்ப வடுகர் பைந்தலை சவட்டி

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/321&oldid=1587877" இலிருந்து மீள்விக்கப்பட்டது