பக்கம்:மறைமலையம் 22.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

L

307

மேலைக்கங்கா அரசனான இரண்டாம் பிருதிவிபதி வெட்டுவித்த உதயேந்திரப் பட்டயங்கள் அவன் பாட்டனான முதலாம் பிருதிவிபதியின் போர்த்திறங்களை நுவலுகின்றன; அப் பட்டயங்களின் செய்யுட்களுள் ஒன்று அறிவாளர் ஹூல்சு துரையவர்களால் திருத்தி வெளியிடப்பட்டபடி பின்வருமாறு காணப்படுகின்றது:

"ய:ஸ்ரீ புறம்பிய

-

மஹாஹவ மூர்த்தி தீர : பாண்ட்

-

-

-

யேச்வரம் வரகுணம் ஸஹஸா விஜித்ய க்ருத்வ ஆர்த்த யுக்தம் அபராஜித - ஸாப்தம் - ஆத்மப்ராண வ்யயேந ஸுஹ்ரிதஸ் - த்ரிதிவாஞ் ஜகாம.

-

இதற்கு அவர் ஆங்கிலத்தில்28 எழுதியதன் தமிழ்மொழி பெயர்ப்புத் "திருப்புறம்பயத்தில் நடந்த பெரிய போர்க்குத் தலைவனாய் நின்று. பை பாண்டியவேந்தன்

ய யாற்

வரகுணனைத் தோல்வி அடைவித்து, அதனால் தன்நண்பன் பட்டப்பெயராகிய அபராஜிதன் (அஃதாவது வெல்லப் படாதவன்) என்பதைப் பொருளுடையதாக்கி இந்த வீரன்தன் உயிரைக் கொடுத்து வானுலகு புகுந்தான்” என்பதேயாகும். இதனால், மேலைக்கங்கா அரசனான முதலாம் பிருதிவிபதி தன் நண்பனான அபராஜித மன்னனுக்குத் துணைவனாய்ச் சென்று, திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில் வரகுணபாண்டி னைத் தோற்றோடச் செய்து தான் அப்போரிற்பட்ட படுகாயத்தில் இறந்துபட்டா னென்பது நன்கு புலனாகின்ற தன்றோ? இங்ஙனம் அபராஜித மன்னனோடும் அவனுக்குத் துணைவந்த முதலாம் பிருதிபதியோடும் போர்புரிந்து அவர்க்குத் தோற்றுப்போன வரகுண பாண்டியனை அப் போரில் வெற்றியடைந்தவன் என்று நெஞ்சந் துணிந்து பொய்யுரை கூறிய ‘தமிழ் வரலாறு' உடையார் கூற்றுச் சால அழகிது! இவ்வாற்றற் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற் போரிற் றோற்ற இவ் வரகுணபாண்டியனும், மூன்றாம் நூற்றாண்டில் தன்மேல் வந்தெதிர்த்த சோழ மன்னனை இறைவனருளால் வன்ற வரகுணபாண்டியனும் வேறு வேறு ஆவரல்லது ஒருவராகாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதல் காண்க. வெறும் பெயரொப்புமைபற்றிப், பழைய சங்க நாட் புலவராகிய 'பொய்கையா’ரையும், அவர்க்கு நெடுநாட் பின்னிருந்த 'பொய்கையாழ்வா' ரையும் ஒன்றுபடுத்துதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/340&oldid=1587905" இலிருந்து மீள்விக்கப்பட்டது