பக்கம்:மறைமலையம் 22.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1✰

இங்ஙனம் இருக்க, ஒருநாட் பாண்டிய

47

மன்னன்

அத்தாணி மண்டபத்தின்கண் வந்து வைகியவழிக், குதிரைத் துறைக்காவலர் அவன் திருமுன்போந்து பணிந்தெழுந்து 'ஐயனே! அளவிறந்த குதிரைகள் நோயால் இறந்து வீழ்ந்தன; எஞ்சி நிற்பனவும் பிழைக்குமோ பிழையாவோ என்னும் நிலையில் இருக்கின்றன; இதனாற் குதிரைப்படை கேடுறு மாதலால், உடனே ஓரிலக்கங் குதிரைகள் புதியவாய்க் கொண்டுவந்து சேர்த்தற்குத் திருவுளம் பற்றி யருள்க!” என மொழிந்தனர். அதன்மேல் அரசன் குதிரைகள் எங்கே விலைகொள்ளலாம் என்று உசாவச், "சோழ நாட்டில் திருப்பெருந்துறையை யடுத்த கடற்கரைப்பட்டினத்திலே மிலேச்சநாட்டு ஆரியர்கள் உயர்ந்த குதிரைகளைத் திரள் திரளாகக் கொண்டுவந்து இறக்கியிருக்கின்றனர்; அவற்றை யாங்கள் கண்டுவந்தோம், பெருமானே' என்று ஒற்றர் சிலர் தொழுது கூறினர். அதுகேட்ட அரசன் தனக்கு முதல் அமைச்ச ராய்த் திகழும் மாணிக்கவாசகரைத் தன்மாட்டு வரு வித்து ‘நங் குதிரைத்துறைக் காவலர் நம் பரிகள் பெரும் பாலும் நோயால் இறந்தனவென் றறிவித்தார். ஆதலால், நீர் நமது களஞ்சியத்திலிருந்து வேண்டியவளவு பொன் எடுத்துச் சன்று, பரி நூல் இலக்கணத்திற்கு ஒத்த உயர்ந்த குதிரைகள் விலைகொண்டு வருதல் வேண்டும்' என்று மொழிந்தான். அடிகளும் ‘அங்ஙனமே விரைவிற் செய்வேன்' எனக் கூறி டைபெற்றுப் போந்து, கருவூலத்தைத் திறந்து, வேண்டும் பாருள் எடுப்பித்துக் கொண்டு, எடுத்த 6 பொருள்

இவ்வளவெனக் கணக்கிலும் பதிவித்துப், பரிவாரங்களைப் பயணத்திற்கு ஒழுங்குசெய்கவெனக் கற்பித்துக், கூடலாலவாய்க் குழகனையும் அங்கயற் கண்ணியையுந் தொழுதற்குக் கோயிலுட் சென்றார். சென்று இறைவனையும் இறைவியையும் அன்பால் அகங்கரைந்து பணிந்து ‘அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே, பாண்டியமன்னன் ஏவல்வழிச் செல்லும் அடிய னேற்குச் செல்லும்வினை தீதின்றி இனிது கைகூடுமாறு அருள்செயல் வேண்டும்; எளியனேற்கு நின்னை யல்லாற் பிறிது துணையுண்டோ பெம்மானே!' என வேண்டிப் பணிந்து திரும்புகின்றபொழுது, ஓர் அந்தணன் அவரெதிரே போந்து உவப்புடன் திருநீறு அளிக்க, அதனைப் பெற்று அணிந்து 'மேற்கொண்ட வினை கை கூடும்' என மனங்களித்துவந்து தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/80&oldid=1587526" இலிருந்து மீள்விக்கப்பட்டது