பக்கம்:மறைமலையம் 23.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

ருக்க இடம் பெற்றார்களென்றும்.

91

ரு

இனி, ஆரியப்பார்ப்பனர்கள் தாம் தேவரினும் உயர்ந்தோ ரென்றும், தமது உதவியினாலேயே தேவர்கள் வானுலகத்தில் என்றும். வேள்வியாற்று தலாலாவது பிறரிடம் இரந்து பொருள் பெறுதலாலாவது பார்ப்பனன் குற்றம் எய்தமாட்டான். வேதம் ஓதினும் ஓதாவிடினும் பார்ப்பனன் இகழப்படுவான் அல்லன், கற்றவனாயினுங் கல்லாதவனாயினும் பார்ப்பனன் சிறந்த தெய்வமேயாவான் என்றும்' எழுதி வடமொழி மகாபாரதத் தினுள் நுழைத்து வைத்தார்கள். அதுமட்டுமோ, ஒரு பெண்ணுக்குப் பத்துப்பேர் கணவர்கள் இருந்தாலும் ஒரு பார்ப்பனன் சென்று அவளது கையைப் பிடித்தால் அப் பார்ப்பனனே அவளுக்குக் கணவனாவன். ஒரு ராஜந்யனும் ஒரு வைசியனுங்கூட அவளுக்குக் கணவன் ஆகார் என்றெழுதி அதனை ‘அதர்வவேதம்' 5ஆங் காண்டத்திற் சேர்த்திருப்ப தோடு, தம் மனைவியரை எவரேனுங் கைப்பற்றினால் அவர்க்கு அளவிறந்த துன்பங்கள் வரும் எனவும் அச்சுறுத்தி அதன்கண் வரைந்துவைத்திருக்கின்றனர். ஆரியப்பார்ப்பனர் தமிழ்நாட்டிற் குடியேறித் தம்மைத்தாமே வறிதே உயர்த்திப் பேசிக்கொண்டு தமிழரை ஏமாற்றித் தமிழ்க்குடி மாதர்களின் கற்பை அழிக்க முயன்றமைகண்டே தமிழ்ச் சான்றோர்கள்.

.

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்”

என்றும்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டு ஒழுகலான்”

என்றும்,

“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

என்றும்,

66

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/100&oldid=1588390" இலிருந்து மீள்விக்கப்பட்டது