பக்கம்:மறைமலையம் 23.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

95

ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது ஆங்கேயாவது வைப்பேன்; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ" (10வது மண்டிலம், 119) என்று இதனை இங்ஙனமே இன்னும் நீளமாக அவ்வெறியன் பாடிக்கொண்டு செல்கின்றான்.

வ்வாறே சூதாட்டத்திற் கைதேர்ந்த ஒருவன் பாடிய ஒருபாட்டின் ஒரு பகுதியையும் அவ் விருக்கு வேதத்தினின்றே மொழிபெயர்த்து வரைவாம்:

"வளிமண்டிலம் வரையில் உயர்ந்தோங்கிய மரங்களிற் காய்த்த இச் சூதுகாய்கள் பலகைமேல் உருள்கையில் எனக்கு மிகுந்த களிப்பைத் தருகின்றன.

மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத இச் சூதுகாய் என்மனத்திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது.

  • * *

ச்

முடிவாக மிஞ்சிய ஒருசிறு முனையையுடை ய சூதுகாயின் பொருட்டு என் மனைவியையும் யான் நீக்கி விட்டேன்.

என் மனைவியும் என்னை அகலவைத்து ஒழுகுகின்றாள்; அவளின் தாய் என்மேற் பகை பாராட்டுகின்றாள்; அல்லற்பட்ட இவனுக்கு ஆறுதல் சொல்வார் எவருங் காணப்படவில்லை.

விலையுயர்ந்த ஒரு குதிரை வலிவுகுன்றி மூத்தாற் போல், இந்தச் சூதனுக்கும் ஏதோர் ஊதியமுங் காண்கிலேன்.

தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற், கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் ஆ தழுவுகின்றார்.” (10ஆம் மண்டிலம், 34) என்று நெடுகப் பிதற்றிக் கொண்டு பின்னும் பின்னுஞ் சூதாட்டத்திலேயே தனக்கு விழைவு செல்லுதலைக் கூறிச்செல்கின்றான். இத்தகைய சூதாட்டப் பாட்டுகள், கட்குடிப்பாட்டுகள், வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள், தமிழர்மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டிப் பாடிய பாட்டுகள் போல்வனவே மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/104&oldid=1588409" இலிருந்து மீள்விக்கப்பட்டது