பக்கம்:மறைமலையம் 23.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

  • மறைமலையம் - 23

பெருங்கோப்பெண்டு

கோவையாரினும் நன்கு விளக்கப்பட்டிருத்தல் காண்க. இக் காதற் கற்பொழுக்கத்தின் உண்மை இ இலக்கியங்களாய்ப் ஆதிமந்தி, கண்ணகி, மாதவி, மங்கையர்கரசியார், காரைக்காலம்மையார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் முதலான தெய்வத்தமிழ் மாதரும் அவர்தங் கொழுநருந் திகழ்ந்தமை காண்க. ஆதலாற், காமப்பிணியால் நிலைகுலையும் உலக வாழ்க்கை, காதலன்பினால் மட்டுமே சீர்திருத்தி நடை பெறுவதாகலின் இப் பெற்றியதான காதலன் புடைய தமிழர்க்கே உலகவாழ்க்கை செவ்விதின் நடைபெறு வதாமென்று உணர்ந்துகொள்க.

மேலெடுத்துக் காட்டிய வரலாற்றில் நான்முகக் கடவுள் (பிரமதேவன்) தன் புதல்வியைப் புணர்ந்தபின் காம மயக்கந் தெளிந்து, காமத்தெய்வமாகிய மதனவேளைச் சினந்து, "சிவபிரான் நின் உடம்பைச் சாம்பராக விரைவில் எரிப்பர், என்று வைதமையும் மேற்சொல்லிய மச்சபுராண உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால், ஆரியர் காதலன்பின் இயல்பு இன்னதென்றறியாது குடித்து வெறித்துச் சிற்றின்ப மென்னும் இழிந்த காமத்தின் வழியராய் ஒழுகினராகலின் அவரோடு கூடிய தமிழரும் அவர் போற் கெடாமைப் பொருட்டே திருவள்ளுவனார்,

66

“சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்

என்று அருளினார். திருமூலரும்,

“காமமுங் கள்ளுங் கலதிகட் கேயாகும்"

என்றும்,

"மயங்குந் தியங்குங்கள் வாய்மை யழிக்கும் இயங்கம் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும்”

என்றும் அருளிச்செய்தமை காண்க.

(குறள் - 173)

(313)

(317)

மேலும், ஆரியமாதர்கள் கற்பொழுக்கமின்றிக் காம இன்பத்தில் மிக்குநின்றா ரென்பதூஉம் பழைய ஆரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/107&oldid=1588423" இலிருந்து மீள்விக்கப்பட்டது