பக்கம்:மறைமலையம் 23.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

101

ங்ஙனமெல்லாம் உயர்ந்த நோக்கம் எட்டுணையும் இல்லாத ஆரியப்பார்ப்பனர் தம்மினத்தவரை யன்றி, ஏனை மக்களையும் அவர்தம் நலங்களையும் சிறிதுங் கருதிப் பாராதவராயிருந்தமையின், அவர் தம்மனோர் தொகையைக் பெருக்கிக் கொள்வதொன்றின் மட்டுமே நாட்டம் வைத்துத், தம் மாதரின் கற்பொழுக்கத்தையும் ஒரு பொருட்டாக நினையா ராயினார். அதனால், அவர் புதல்வர்ப் பேற்றை முதல் நிலையிலும், மாதரின் கற்பொழுக்கத்தை அதற்குப்பின் இரண்டாம் நிலையிலும் வைப்பர்; மற்றுத் தமிழ்மக்களோ மாதரின் கற்பொழுக்கத்தை முதற்கண்ணும், புதல்வர்ப்பேற்றை அதற்குப்பின் இரண்டாம் நிலைமைக் கண்ணும் வைப்பர். இதற்குச் சான்றாக, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் வாழ்க்கைத் துணை நலத்தை' முன்னும் 'புதல்வரைப் பெறுதலைப்' பின்னுமாக வைத்துரைத்தமைகாண்க.

இனி, ஒருவற்கு மனைவியாய் வாழ்க்கைப்பட்டாள், அங்ஙனம் வாழ்க்கைப்படுதற்கு முற்றொட்டே அவன்பாற் காதல் என்னும் பேரன்பு கொள்ளப்பெறின் அன்றி, அவள் அவற்கு உயிர்போற் சிறந்த உண்மை மனையாளாய்க் கற்பொழுக்கத்தின் நிலைபெறுதல் ஏலாமையின், கணவனும் L மனைவியும் ஆதற்கு முன்னரே கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி அவர் ஒருவரை யொருவர் தலைப் பட்டுக் காதலாற் புணர்க்கப்படும் “அன்பின் ஐந்திணை யொழுக்கத்தையே" பண்டைத் தமிழர் வேண்டினர். இவ்விழுமிய தமிழ்முறையைத் தெரித்தற்கன்றே ஆசிரியர் திருவள்ளுவர் இன்பத்துப்பாலின் ஒரு தலைமகன் தன் இயல்புக்கு ஒத்த ஒரு தலைமகளைத் தனியே தலைப்பட்டுக் காதலாற் கூடுங் களவியலை' முன்வைத்து, அங்ஙனங் கூடிய அவ் விருவரும் பின்னர் இருமுது குரவரும் எதிர்நின்று வதுவையாற்ற வதுவையயர்ந்து இல்லறம் நடாத்துங், ‘கற்பியலை' அதன்பின் வைத்து ஓதியதூஉமன்றி, அன்பு இல்வழிக் கணவனும் மனைவியுமாம் இல்வாழ்க்கை சிறிதும் வேண்டப் படாதென்பார்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

وو

எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/110&oldid=1588437" இலிருந்து மீள்விக்கப்பட்டது