பக்கம்:மறைமலையம் 23.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

9. திருப்பெருந்துறை மிழலைக்

கூற்றத்திலுள்ளது

குதிரைசெய்வானும்”

ம்

இனி, அடிகளின் வரலாற்றுவழியே சென்று எதிர்ப் பக்கத்தவர் கூறும் ஏனைய மறுப்புகக்களையும் ஆராய்வாம். திருவாரூர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு அடிகள் “நரியைக் என்று அருளிச் செய்திருப்பது மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடலையே வெள்ளிடைமலைபோல் விளக்குவ தாகவும், மாணிக்கவாசகரை ஏனை மூவர்க்கும் பிற்பட்டவ ராக்குதற்கு முனைந்துநிற்போர் அஃது அவர் பொருட்டு நிகழ்ந்தது அன்றென அதனை யடியோடு புரட்டப் பார்க்கின்றார்கள். சான்றுகள் இல்லாதவற்றை யெல்லாம் 'இஃது அப்படியிருக்கலாம். இப்படி யிருக்கலாம்' என்று வற்றெண்ணங்கொள்ளும் இவர்கள், மாணிக்கவாசகப் பெருமான் தம்பொருட்டு இஃது நிகழ்த்தப்பட்டதாகத் தாமே 'திருவாசகத்'திற் பல இ டங்களில் அருளிச் செய்திருக்கவும், அவர் காலந்தொட்டு இது காறும் வந்திருக்கும் வரலாற்று நூல்களும் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டார் வழங்கி வரும் வழக்குரைகளும் எல்லாம் அஃது அவர் பொருட்டே நிகழ்த்தப்பட்ட தாகுமென ஒரேமுகமாய்க் கூறாநிற்பவம். இவை யெல்லாவற்றிற்கும் முரணாக ஏதொரு சான்றுமின்றி முழுப்புரட்டாக, 'நரியைக் குதிரை செய்வான்' என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்த்தியதனை யன்று. அஃது எல்லாம்வல்ல இறைவன தாற்றலைக் குறிப்பிக்க எழுந்த ஒன்றாம் என எதிர்ப்பக்கத்தவர் அழிவழக்குப் பேசுவாராயினர்.

எல்லாம் வல்ல இறைவன் செயலைக் காட்டுதற்கு 'நரியைக் குதிரை செய்வானும்’ என்னும் ஒன்றனைக் குறிப்பிட்டு ஓதவேண்டியதென்னை? அணுவை மலையாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/12&oldid=1588181" இலிருந்து மீள்விக்கப்பட்டது