பக்கம்:மறைமலையம் 23.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 23

அகநானூறு, 'கலித்தொகை,’ ‘பரிபாடல்' முதலான செந்தமிழ்த் தொகை நூல்களிற் போந்த மிகப் பழைய பாட்டுகளில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமை கொண்டு, அப் பாட்டுகள் இயற்றப்பட்ட காலங்களில் அகத்தியர் என்பார் ஒருவர் இங்கு இருந்திலர் என்பது தெளியப்படும். படவே, அகத்தியர் என்பார் ஒருவர் வடக்கிருந்து வந்து தமிழ்க்கு முதலிலக்கணம்; செய்தாரென்று பின்னுள்ளோர் கட்டிவைத்த கதையும் பொய்யே யாதல் தெளியப்படும். அகத்தியர் ‘அகத்தியம்’ எனப் பெயரிய நூல் செய்தது உண்மையாயின், அதனோடு ஒருகாலத்ததென்று பின்னுள்ளோராற் சொல்லப்படும் ‘தொல் காப்பியம்’ இன்று காறும் வழங்கா நிற்பவும் அவ் வகத்தியத்தின் ஒரு பகுதிதானும் காணக்கிடையாமை என்னையெனக் கூறி மறுக்க அற்றேல், உரையாசிரியர்கள் ஆங்காங்குத் தம்முரையுட் சிலவற்றை அகத்தியச் சூத்திரம் என்று காட்டுதலும், 'சிற்றகத்தியம்,’ 'பேரகத்தியம்,' என்னும் பெயராற் சில சூத்திரங்கள் உலவுதலுங் காண்டுமாலெனின்; வடசொற்களும் பிற்றை ஞான்றை யெளிய தமிழ்ச்சொற்களும் கொண்டு ஆக்கப்பட்டுத் திட்ப நுட்பம் இன்றி உலவும் இப் போலிச் போலிச் சூத்திரங்களைத் தனித் தமிழ்வளனுந் திட்பநுட்பச் செறிவும் வாய்ந்து திகழும் தொல்காப்பியச் சூத்திரங்களோடு ஒப்பிட்டு நோக்குந் தமிழறிஞர் எவர்தாம் அவை தொல்காப்பிய காலத்தில் உண்டான அகத்தியச் சூத்திரங்களாமெனக் கூற ஒருப்படுவர். அப்போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வரென மறுக்க.

ன்

ம்

அற்றாயினும், அகத்தியர் எனப் பெயரிய வடநாட்டு முனிவர் ஒருவர் தென்றமிழ்நாடு போந்து தமிழராய்ந்திருந்தார் று ஓர் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக வழங்கிவரும் பழைய வரலாறு பொய்யாமோ வெனின்; அது பொய்யாகாது; இருக்குவேதத்திற் பலபதிகங்களை இயற்றிய அகத்தியர் மிகப் பழைய காலத்தே இருந்தவர்; அவர் தெற்கேயுள்ள தமிழ்நாடு புகுந்தவர் அல்லர்; தமிழறிந்தவரும் அல்லர். மற்று அவர்க்குப் பன்னெடுங்காலம் பின்னிருந்த மற்றோர் அகத்தியரே இத் தமிழ்நாடு புகுந்தவராகக் காணப்படுகின்றனர். கி.மு. முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/123&oldid=1588500" இலிருந்து மீள்விக்கப்பட்டது