பக்கம்:மறைமலையம் 23.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

இராமன்

2

119

சென்று

குரங்கினங்களைப் படைகூட்டிச் ராவணனொடு பொருது அவனைக் கொன்று அவளை மீட்டு வந்ததும் தசரத ஜாதகத்திற் காணப்படாதிருக்கப் பின்வந்த இராமாயணத்திலோ இவையெல்லாம் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால், இவையெல்லாங் கற்போர்க்கு இன்பம் பயத்தல் வேண்டிக் காப்பியப்புலவன் தன் கருத்தாற் படைத்திட்டுக் கொண்ட வெறுங்கதையேயல்லாமல் உண்மையாய் நிகழ்ந்தன அல்லவென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

இதனாலன்றோ கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாட்டுக்களில் எங்கும் இராமனைப் பற்றி யாதல் இராவணனைப் பற்றியாதல் எதொரு குறிப்புங் காணப்பட வில்லை. தமிழகத்தின் கண்ணதாகிய இலங்கையில் இராவணன் எனப் பெரிய பெருவேந்தன் இருந்தது உண்மையாயின், அவனுக்கும் இராமனுக்கும் பெரும்போர் நிகழ்ந்தமை மெய்யாயின் எத்தனையோ சேர சோழ பாண்டியர்களையும் ஏனையோரையுந் தம்முடைய பாட்டுகளிற் குறிப்பிட்ட பண்டை நல்லிசைத் தமிழ்ப் புலவர்கள் அவ் விருவரையும் அவர் தமக்குள் நடந்த போரையு ங் குறியாது விடுவரோ? ‘புறநானூற்’றில் ‘ஊன்பொதிபகங்கடையார்' என்னும் புலவர் ஒருவர் மட்டுமே இராமாயண கதையைத் தமது பாட்டொன்றிற் குறிப்பிட்டிருக்கின்றார். அதனால், இவர் இராமாயண கதை தமிழ்நாட்டில் பரவத் துவங்கிய கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். இராமாயண கதை தமிழ்நாட்டில் வந்து பரவியும். அது மாபாரத கதையைப் போலத் தமிழ்ப்புலவர் உள்ளத்தைக் கவர்ந்திலது; ஏனெனில் உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் உண்மைச் செந்தமிழ்ச்செய்யுள் வழக்கிற் பழகிய பழந்தமிழ்ப் புலவர்க்கு, இல்லதைப் புனைந்துகூறும் இராமாயணம் சிறிதும் ஒவ்வா தாயிற்று.மற்று, தாயிற்று. மற்று, மாபாரதக் கதையோ பெரும்பான்மையும் உண்மையாய் நிகழ்ந்த நிகழ்ச்சியினைக் கூறுவதாகலின், அது தலைச்சங்க காலத்திருந்த முரஞ்சியூர் முடிநாகராயர்’ முதற் பிற்காலத்திருந்த புலவர் ஈறாகத் தமிழ்நாட்டறிஞராற் பெரிதுங் கொண்டாடப்படுவ தாயிற்று. கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலிருந்த பெருந்தேவனார் ஒருவரும், ஒன்பதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/128&oldid=1588524" இலிருந்து மீள்விக்கப்பட்டது