பக்கம்:மறைமலையம் 23.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

66

121

நரசிங்கன் முதலான திருமால் வடிவங்களையே எங்கும் மிகுத்துப் பாடி, "மலையாற் குடைகவித்து, அடைந்த அருவினையோடு" என்னும் இரண்டு செய்யுட்களில் மட்டும் இராமனை அருகி வழிபட்டுப் பாடியிருக்கின்றார்! இதனாற், பொய் கையாழவாரது காலத்திலே தான் இராமாயண கதையும், அதன்வழியே இராமனது வணக்கமும் இத் தென்றமிழ் நாட்டிற் பரவத் துவங்கினமை பெறப்படும். அற்றேற், 'சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவையிலும் வேறு சில இடங்களிலும் இராமன் கதை சொல்லப்பட்டவா றென்னையெனின்; இராமாயண கதை ஆண்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அவ்விடங்களிலும் ராமன் பெயர் காணப்படாமையும், அக் கதைக்குரியோன் மாயோனாகவே கூறப்பட்டமையும், அம்மாயோன் வழிபாடுதானும் ஆயர் தமக்குள் வழங்கினமையும் உற்று நோக்குங்கால் உண்மையில் இல்லாத இராமனைத் தெய்வமாகக் கோடல் பழைய தமிழ்மக்கட்கு உடம்பாடின்மை பெற்றாம். ஊன்பொதி பசுங்குடையார் தமது பாட்டுள் இராமன் பெயர் குறித்தோதினரேனும், அவனை அவர் ஒரு தெய்வமாக விதந்தோதாமையும் நினைவிற் பதிக்கற்பாலதாகும். எனவே, இராமாயணம் இத் தமிழ நாட்டின்கண் மிக்குப் பரவத்துவங்கிய காலமும் இராமனும் மாயோன் வடிவமாகக் கருதப்பட்டு வணங்கப்படலான காலுமுங் கி.பி. மூன்றாம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரையிற் காணப்படாமையாற், சமண்மதம் ஒடுங்கிய ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்குப் பின்னர்த்தான், அவ்விரண்டும் மேலோங்கலாயின வென்பது பெறற்பால தாகும். இம் முறையால் நோக்கும்வழிப் பொய்கையாழ்வாரது காலமும் ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்கண்ணதாதலும் தானே பெறப்படும்.

6

மேற்காட்டியவாற்றாற் கி.மு. முதல் நூற்றாண்டின் கண் இயற்றப்பட்ட வான்மீகி இராமாயணத்திற் போந்த இராமன் கதை உண்மையாக நடந்ததல்லாமையால், அகத்தியர் இராமன் காலத்தவரென்றலும் உண்மையன்றென ஓர்க. மேலும் வான்மீகி இராமாயணம் அகத்தியர் ருப்பினை நிகழ்காலத்தின்கண் வைத்து உரைப்பதோடு, ஒன்றற்கொன்று பெரிதுஞ் சேய்த்தாக வுள்ள அகத்தியர் இருப்பிடங்கள் பலவற்றை எடுத்தோதுதலின் ‘அகத்தியப்’ பெயர்பூண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/130&oldid=1588533" இலிருந்து மீள்விக்கப்பட்டது