பக்கம்:மறைமலையம் 23.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

123

நுவலப்படுதலின், அவ் வகத்தியரே தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்று கொள்ளாமோ வெனிற்; கொள்ளாமன்றே, என்னை? அகத்திய ஜாதகத்திற் சொல்லப்பட்ட அகத்தியர் என்பார் புத்த சமயக் கொள்கையைத் தழுவினவராய்த் தாம் பிறந்த குடியின் செல்வ வாழ்க்கையில் வெறுப்புற்றுத், துறவுபூண்டு, தென்கடற் கண்ணதாகிய காரைத்தீவில் வந்து தனியிருந்து நோற்றமை ஒன்றே ஆண்டுக் குறிக்கப்பட்டதன்றி, அவர் மலையமலைக்கண் வந்து வைகித் தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்பது ஓர் எட்டுணையுங் கூறப்படாமையின் என்பது, என்று இத்துணையுங் கூறியவாற்றால், அகத்தியப் பெயர் பூண்டார் பலரில் ஒருவர் கி.மு. முதல் நூற்றாண்டில் இத் தென்னாடு போந்து இங்குள்ளார் சிலர்க்கு வடநூற்பொருளை அறிவுறுத்தினார் என்னும் அத்துணையே உண்மையாவதா மன்றி, அவர் கிறித்து பிறப்பதற்குப் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ்நாடு புகுந்து தமிழ்க்கு முதல் இலக்கணஞ் செய்தாரென்பதும், அவர் தொல்காப்பியனார் யமதக்கினி மகனாரென்பதும் உண்மையாகா வென்க. இவையெல்லாம் பிற்காலத்தெழுந்த பார்ப்பனப் புராணப் பொய்யுரையா மென்றே கடைப்பிடிக்க, கி.மு. முதல் நூற்றாண்டில் நக்கீரனாரோடு ஒருங்கிருந்த அகத்தியர், கி.பி.

ஆசிரியர்

எட்டாம்

நூற்றாண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து ‘அகத்திய பக்தவிலாசம்' என ஒருநூல் வடமொழியில் இயற்றினாரென்றலும், அதனைத் தமிழில் மொழிபெயர்த்து சேக்கிழார் 'திருத்தொண்டர் புராணம்' பாடினாரென்றலும். அங்ஙனமே முழுப் புரட்டுரையாதல் காண்க. சேக்கிழார் அருளிச் செய்த இந் நூலையே எவரோ ஒரு பார்ப்பனர் வடமொழியில் மொழிபெயர்த்து வைத்து அதற்கு அகத்திய பக்தவிலாசம்' எனப் புனைவு பெயர் கட்டிவிட்டார் என்க.

6

இனித், 'திருமந்திரநூன்' முகவுரைகாரர், காசுமீரத்தின் கட் டோன்றிய 'பிரத்திய பிஞ்ஞா தரிசனமே' சைவசித்தாந்தத் திற்குப் பிறப்பிடமாம் என்றதும் பொருந்தாமை காட்டுவாம்; காசுமீரத்திற் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த ‘வசுகுப்தர்' என்பவராற் கண்டெடுக்கப்பட்ட ‘சிவசூத்திரங்க’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/132&oldid=1588543" இலிருந்து மீள்விக்கப்பட்டது