பக்கம்:மறைமலையம் 23.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

5

செய்தற்கு ஆகாதவற்றைச் செய்த சிறப்பியல்புகளைக் கேட்ட வளவானே எவர்க்குந் தம்மை மீறியே உள்ளம் நெக்கு நெக்குருகி அன்பு மேலெழும். ஆகவே, பேரன்பின் துறையில் அமிழ்ந் திருந்த திருநாவுக்கரையர், முதலான அருட்செல்வர்க்கு, இறைவன் இங்ஙனஞ் சிறப்பாகத் தன்னடியவர்பாற் செய்த சிறப்பியல்புகளை நினைந்து நினைந்து அவை தம்மை ஓதி ஓதி அன்பால் உருகுதலே கருத்தா மல்லது. பிறி தெவ்வாற்றானும் உணரப்படாத இறைவன் பொது வியல்புகளைச் சொல்லுதலிற் கருத்து இல்லையாகு மென்க. உலக வழக்கினுள்ளும் நல்லா ரொருவரைப் பிரிந்த அவர் நண்பர். அந் நல்லவர் ஆங்காங்கு ஏழை ழை எளியவர்க்கும் ஏனையோர்க்குஞ் செய்த அவ்வந் நற்செயல்களை எடுத்துச் சொல்லிச் சொல்லி அன்பினால் ஆற்றாது அழுதல் காண்டு மன்றே. இவ்வாறு சிறப்பியல்புபற்றி நிகழும் அன்புரைகளே தேவார திருவாசகங்களினும் ஏனை யன்பர்கள்அருளிச்செய்த திருப்பாட்டுகளினும், நிரம்பி யிருத்தல் காணப்படும். படவே, “நரியைக் குதிரைசெய்வானும்” என்று திருநாவுக்கரசு அடிகள் அருளிச்செய்தது மாணிக்க வாசகர் பொருட்டு இறைவன் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த சிறப்பியல்பினையே உணர்த்துவதாகுமென்று கடைப்பிடிக்க ஒரு செய்யுளுக்காதல், அச் செய்யுளிலுள்ள ஒரு சொற்றொடருக்காதல் உரை செய்யுமிடத்து ஆக்கியோன் கருத்தறிந்து அதற்கு உரையுரைக்க வேண்டுமே யல்லாமல் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரை கூறுவது பொருத்தமில் போலியா மென்பது ‘தமிழ் வரலாறு' உடையாரும் அவரோடு ஒத்தாரும் உணரக் கடவராக!

அற்றேல், ‘நரியைக் குதிரைசெய்தல்' முதலாக மேற்கூறிய திருவிளையாடல்கள் இன்னார்பொருட்டு நிகழ்ந்தன வென்று கூறாமையால், அவை இறைவன் பொதுவியல்புகளையே உணர்த்துமென்று ‘தமிழ் வரலாறு' உடையார் உரைத்தாரா லெனின்; திருநாவுக்கரசுகள் அத் திருவிளையாடல்களை வரன்முறையே முற்றுங் கூறுவேமென்று புகுந்து, இடையே அஃது இன்னார் பொருட்டு நிகழ்ந்ததெனக் கூறாது விட்டிருப்பினன்றோ அவ்வாறு தடை நிகழ்த்துதல் ஆம். மற்று, அவர் இறைவனை எழுத்துதற் பொருட்டுத் தனித்தனியே அருளிச்செய்த பாடல்களில் அங்ஙனம் வரலாற்றுக் குறிப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/14&oldid=1588190" இலிருந்து மீள்விக்கப்பட்டது