பக்கம்:மறைமலையம் 23.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

  • மறைமலையம் - 23

ரென்பதூஉம், அவர் முழுமுதற் கடவுளைக் கண்டறி யாமையின் கடவுட்பொருள் இதுதான் என்று துணியமாட்டாது பெரிதும் இடர்ப்பட்டு மயங்கினரென்பதூஉம், அதனால் அவர் கடவுட் டன்மையுடையரல்ல ரென்பதூஉம் இனிது புலப்படும். நம்மாழ்வார் தமது தமது இளமைக்காலந்தொட்டே பற்பல நூல்களையும் பன்னாளும் ஓதியுணர்ந்தவ ரென்பதற்குரிய அடையாளங்கள் அவர்தம் பாட்டுக் களிலேயே காணப்படு கின்றன . அவற்றுட் சில காட்டுவதும்:

“அங்கமெலாங் குறைந்துஅழுகு தொழுநோ யாராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்

அவர் கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே

என்று திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த கருத்தை எடுத்துக்,

"குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழ்இழிந்து எத்தனை

நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்

வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்றுஉள் கலந்தார் அடியார் தம்அடி யார்எம் மடிகளே'

என்று நம்மாழ்வார் பாடினமை காண்க.

66

‘தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்

சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேஎந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்

ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே'

وو

என்னுஞ் செய்யுளை முதலாகக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார்அருளிய பதிகப்பொருளை எடுத்துக்கொண்டு

66

'என்னாவ தெத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/143&oldid=1588571" இலிருந்து மீள்விக்கப்பட்டது