பக்கம்:மறைமலையம் 23.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -23

ஓதியுணர்ந்த புலவராதலோடு தமது காலத்துப் பரவிய தமிழ் வடமொழி வழக்குகளையுந் தழுவித் 'திருவாய்மொழி' பாடியவாரவரென்பதுந் தெற்றென விளங்குதல் காண்க. என்று பின்னுள்ள

6 எனவே,இவர்

ஓதாதுணர்ந்தவர்

வைணவப்புலவர் எழுதி வைத்தது வெறுங் கட்டுக்கதையே யல்லாமற் பிறிதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் ஓதாதுணர்ந்து பாடினவர் என்பதற்கு அை யாளம் என்னையெனிற் பழைய தமிழ்நூல்களின் சொற்றொடர்களுங் கருத்துப்பொருள்களும் அவர் அருளிய பாட்டுக்களிற் காணப்படாமையேயா மென்பது. மேலும், திருஞானசம்பந்தர் திருக்கோயில்கட்குச் சென்றுழி அவ்வப்போது நினைந்த வளவானே திருப்பதிகங்கள் வெவ்வேறாய் அருளிச் செய்திருக்கின்றார். நம்மாழ்வாரோ, இயற்றிய 'திருவாய்மொழி' ஆயிரம் பாட்டுகளையும், ஒருபாட்டின் ஈற்றுச்சொல் அதற்கடுத்த பாட்டின் முதற்சொல்லாக வரும் ‘அந்தாதித் தொடை'யின்கட் படுத்து இயற்றியிருக்கின்றார். மேலும், ‘திருவாய்மொழி' ஆயிரம் செய்யுட்களில் முதற் பத்துச்செய்யுட்கள் பாடும்போதே, அவர்அதனை ஆயிரஞ் செய்யுட்களால் ஆக்க வேண்டுமென்னுங் கருத்துக்கொண் டிருந்தாரென்பது,

L

"பரனடிமேற் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல்நிறை ஆயிரத்து இவைபத்தும் வீடே”

தாம்

என்று அவர் கூறினமையாற் பெறப்படும். பெறப்படவே, இவர் திருமால் கோயில்கடோறுஞ் சென்று, சென்ற வளவானே அன்பினால் அகங்குழைந்து ஆங்காங்கு இறைவனைக் கதுமெனப் பாடினாரல்ல ரென்பதூஉம், தேவார திருவாசங் களுக்கு எதிராகத் திருமாலுக்கும் செந்தமிழ் வழுத்துரைச் செய்யுட்கள் இருத்தல் வேண்டு மென்பதே கொண்டு அவை தம்மைப் பாடினாரென்பதூஉம், 'தேவாரப்' பதிகங்கள் ஒன்றற்கொன்று தொடர்பின்றி அவ்வத் திருக்கோயில்களில் நினைந்தவளவானே தனித்தனியே பாடப்பட்டமையால் அவற்றுட் பல பதிகங்கள் அழிந்து போனமை கண்டு, அங்ஙனமே தாம் திருமால் மேற்பாடுஞ் செய்யுட்களும் அழிந்து போகவிடாமல் அவை தம்மை ஒரு தொடர்பு படுத்துதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/147&oldid=1588575" இலிருந்து மீள்விக்கப்பட்டது