பக்கம்:மறைமலையம் 23.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

என்றும்,

  • மறைமலையம் - 23

“அரியலாற் றேவியில்லை யையன் ஐயாற னார்க்கே.

என்றும்,

“பாகம் மாலை மகிழ்ந்தனர்”

என்றும்,

(திருவையாறு)

(திருவையாறு)

“மால்ஒரு பாகமாக மகிழ்ந்தநெய்த் தானத்தாரே" (திருநெய்த்தானம்)

என்றும்,

“மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார்போலும்”

என்றும்,

“மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்.

(திருவிடைமருதூர்)

(பொது)

என்றும் பலகால் அருளிச் செய்திருத்தலும், பேயாழ்வார்.

66

“தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும்

சூழரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய்இசைந்து."

என்று அருளிசெய்தமையுங் கருத்திற் பதிக்கற்பாலனவாகும்.

இவ்வாறே பண்டைத் தமிழ்ச் சான்றோரும், நீல மேனியினையுடைய அம்மையை இடப்பக்கத்தே ஒருகூற்றிற் கொண்ட சிவபிரானே முழுமுதற்கடவுளெனத் தெளிய வுணர்ந்து வழிபட்டமை,

"நீலமேனி வாலிழை பாகத்

தொருவன திருதாள் நிழற்கீழ்

மூவகை யுலகம் முகிழ்த்தன முறையே2

என்பதனாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/165&oldid=1588595" இலிருந்து மீள்விக்கப்பட்டது