பக்கம்:மறைமலையம் 23.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

161

பொருட்டுச் செய்த ஒரு சூழ்ச்சியேயாகும். இச் சைவ புராணங்களெல்லாம் இறைவனுடைய நுண்ணிய இயல்புகளை உணரமாட்டாத பருப்பொரு ளறிவினார்க்கு அவற்றைத் தெருட்டும்பொருட்டு அவை தம்மை உண்மையில் நிகழ்ந்த கதைகள்போல் வத்து உணர்த்த எழுந்தனவாகும். எல்லாம்வல்ல இறைவனுயர்வைப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாக எழுதப்பட்ட இச் சைவபுராணங்களே, உண்மை யறிவில்லாரால் அவனது உயர்வைக் குறைக்குங் கருவியாகவுங் காண்டுவந்து விடப்பட்ட ன. யாங்ஙனமெனிற் சிறிது காட்டுதும்:

உயிர்களைப் பொதிந்து வருத்தும் ஆணவம் மாயை வினை னை என்னும் மும்மலங்களும் இறைவனது அருள் நெருப்பால் எரிக்கப்படுதலேயே, பொதுமக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டு, வானத்திற் பறந்து செல்லும் மூன்று தீய அரக்கர் தம் பட்டினங்கள் இறைவனது நெற்றிக்கண் நெருப்பால் எரிந்தனவாக வைத்து ஒரு புராணக்கதை எழுதப்பட்டது. இதுவே இக்கதையின் கருத்தாதல்,

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள், முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார்அறி வாரே.

ייך

என்று திருமூலநாயனார் அருளிச்செய்தமையால் அறிப்படும். இவ்வுண்மைப் பொருளறியாத சைவரிற் பருப்பொருளறிவினார், சிவபிரானே தேவர் சமைத்த தேரின் மேல் அமர்ந்து அவ்வரக்கரின் அப்பட்டினங்கண்மேல் வில்லுங் கணையும் ஏந்திச்சென்று அவற்றை எரித்தான் என்று உரைப்பர்; அதுகேட் மற்றைச் சமயத்தார் 'எங்கும் நிறைந்த நும் கடவுள் ஒரு தேர்மேல் ஏறி, ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்குச் செல்வது எப்படி? எவற்றையும் நினைந்த அளவிலே ஆக்கவும் அழிக்கவும் வல்லவன் நுங்கடவுளாயின் அவன் வில்லுங்கணையும் ஏந்தி அவ் வரக்கர்மேற் போர்புரியச் சென்றது எற்றுக்கு? மக்களைப் போல அவனுக்கு வில்லுங் கணையுந் தேருங்கூட வேண்டுமோ? அவ்வரக்கரின் அப்பட்டினங்கள் மூன்றுபருப்பொருள் களாகையால் அவை நிலத்தின்மேல் இருக்கத்தக்கனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/170&oldid=1588602" இலிருந்து மீள்விக்கப்பட்டது