பக்கம்:மறைமலையம் 23.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

163

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் யுள்ளடக்கிப் பருப்பொருளறிவினாரைத் தெருட்டுதற் பொருட்டுப் புனைந்து வைக்கப்பட்டனவாகும். மாணிக்க வாசகப் பெருமானை யுள்ளிட்ட சைவசமய ஆசிரியன்மார் ன்னோரன்ன கதைகளைத் தழுவிச் சிவபிரானைப் பாடினமை, அக் கதைகளுட் கதைகளுட் கிடந்த கிடந்த நுண்பொருளை நோக்கியே யல்லாமல், அவை உண்மையில் நிகழ்ந்தவை என்னுங் கருத்துப் பற்றியன்று. அந் நுண்பொருளெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகுமென அஞ்சிவிடுத்தாம்.

இவ்வாறெல்லாம் சிவபுராண கதைகள் பெருகலானது, வடக்கேயிருந்து வந்த ஆரியப்பார்ப்பனர் பாரத இராமாயண கதைகளை இத் தென்றமிழ் நாட்டிற் கொணர்ந்து பரப்பிக், கண்ணனையும் இராமனையும் உயர்பெருந் தெய்வங்களாகப் புகுத்திய காலந்தொட்டு நிகழ்ந்ததாகும். இக் கதைகள், தம்மை ஆக்கியோர் கருதிய பயனைத் தந்திலவாயினும், சிவபிரான் பிறப்பு இறப்பு இல்லாத் தனிமுதல்வனாய், ஏனையோர் வணங்கும் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் மேலான முழுமுதற் கடவுளே யாவன் என்பதனை நாட்டுதலில் ஒருமுகப்பட்டு நிற்கின்றன. இப் புராண கதைகளுள் யாண்டும் சிவபிரான் ஒரு தாயின் கருப்பையுட்டங்கிப் பிறந்து வளர்ந்து இறந்தான் எனக் கூறப்படாமையே பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாம் விழுமிய உண்மையாகும். சிவபிரானோடு இரண்டறக் கலந்துநிற்கும் அம்மையாகிய திருமாலும், அவனைப் போலவே பிறப்பு இறப்புத் தன்மைகள் சிறிதும் இல்லாதவள் ஆவள். திருமால் பத்துப் பிறவிகள் எடுத்தனரென்றலும், அப் பிறவிகளில் பல அல்லல்களுழந்து பின்னர் இறந்தனரென்றலும போல்வன வாகிய கதை களெல்லாம் வடக்கிருந்து வந்த ஆரியப்பார்ப்பனர் கட்டிவிட்டவைகளாகும். அக் கதைகளிற் கூறப்படுவோர், உண்மையிலே திருமாலின் அவதாரங்கள்அல்லர்; அவருட் சிலர் அறிவு ஆற்றல்களில் ஏனை மக்களைவிடச் சிறிது உயர்ந்தவரும், மற்றுஞ் சிலர் கதைபுனைந்த ஆரியக் குருமாரால் உள்ளவர்போல் வைத்துக் கட்டிச் சொல்லப் பட்ட வரும் ஆவர்; இத்தகைய இவர்கட்கும் முழுமுதற் பொருளாகிய திருமாலுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லையென்பது கடைப்பிடிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/172&oldid=1588605" இலிருந்து மீள்விக்கப்பட்டது