பக்கம்:மறைமலையம் 23.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

  • மறைமலையம் - 23

அற்றேற், பண்டையோர் வணங்கிய திருமால் ஆண் வடிவினரேயாக அவரைப் பெண்பாலாக ஓதுதல் என்னை யெனின்; உலகத்திலுள்ள ஆற்றல்களெல்லாம் வெப்ப தட்பங்கள் என்னும் இருவகை யியக்கங்களினும், அமைப்பு களெல்லாம் ஆண் பெண் என்னும் இருவகை வடிவுகளினும், வண்ணங்க ளெல்லாஞ் சிவப்பு நீலம் என்னும் இருவகை நிறங்களினும் அடங்குமாற்றை முன்னரே விளக்கிக் காட்டினாம். அவ்வாற்றால் தீ வடிவு ஆண்டன்மையின் பாலதாய்ச் சிவந்த நிறத்தினதாதலும், நீர்வடிவு பெண்டன்மையின் பாலதாய் நீலநிறத்தினதாதலும், ஆண்டே விளக்கிக் கிடந்தன. ஆகவே, நீலநிறத்தினையுடைய திருமால் பெண்டன்மை வாய்ந்த தெய்வமேயாக வேண்டுமல்லாமல், ஆண் டெய்வமாதல் செல்லாது. 'நாராயணன்' என்னுஞ் சொல்லும் நீர்க்கடவுள் என்னும் பொருளையேதரக் காண்டாலானும், நாராயணன் மோகினி யென்னும்1 பெண் வடிவு கொண்டு சிவபிரானைக் கூடி ஐயனாரை ஈன்றனன் எனக் கூறும் புராணகதையின் கருத்துத் திருமாலைப் பெண் டெய்வமாகக் கொள்ளு தலையே நோக்கி நிற்கலானும், நாராயணன் ஆண் டெய்வ மாயின் 'நாராயணி' என்னும் பெண்பாற் பெயர் அவற்கு மனைவியாகிய திருமகளை யுணர்த்த வேண்டுமாகவும் அஃது அங்ஙனம் அவளை யுணர்த்தாது சிவபிரான் காதலியாகிய அம்மையையே யுணர்த்துதலானும், திருமால் தன் புதல்வனாகிய நான் முகனைத் திருமகன்பாற் பெற்றான் என உரையாது தானே தனது கொப்பூழினின்றுந் தோற்றுவித்தானென அவன்றன் சிறப்புக்களை விரிக்கும் புராணங்களெல்லாம் ஓதுதலானும் திருமால் பெண் டெய்வமேயாதல திண்ணமென்க.

அற்றேற், பண்டை நல்லாசிரியர்கள் திருமாலை ஆண் வடிவாகவும் வைத்துரைத்தது என்னையெனின்; பழைய தாகிய காலத்தே அனல்வடிவினனாகிய சிவபிரானைக் காணும்பேறு வாய்ந்த அடியார்கள் அப்ப னுருவினைத் தெளியக் கண்டாற்போல, அவனுள்ளடங்கிச் செவ்வனே புலப்படாது நீலநிறத்தின் அளவாய்த் தோன்றிய அம்மை யினுருவினை அங்ஙனந் தெளியக் காணப்பெறாமையின் அந்நீலவுருவினையும் ஆண் வடிவினதாகவே கருதினாராதல் வேண்டும். இவ்வுண்மை தீக் கொழுந்தினை உற்றுநோக்கு மாற்றானும் நன்குணரலாம். பெருவிளக்கத்தோடுந் திகழும் தீக்கொழுந்தின்கட் செந்நிறத்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/173&oldid=1588606" இலிருந்து மீள்விக்கப்பட்டது