பக்கம்:மறைமலையம் 23.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

167

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பாராட்டாத இயற்கை யுடையவ ரென்பது நன்குபுலனாம். ஆரியரது கலப்பு நேர்தற்குமுன் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளை அகக்கண் புறக்கண் இரண்டும் ஒத்துக்கண்டு வழிபட்ட தமிழ்ச் சான்றோர்கள், அஃது ஒருபாற் “சிவன் எனும் நாமந் தனக்கே யுரிய செம்மேனி எம்மானா”யும், மற்றொருபால் “மணிதிகழ் உருவின் மாயோன்" அல்லது "நீலமேனி வாலிழை” யாயும் நிற்கும் உண்மை யியல்பினைத் தெளியவுணர்ந்து அதனையே வழுத்துதலும் பரவுதலுஞ் செய்துபோந்தனர். ஆரியக் கலப்பு நேர்ந்த பிற்காலத்திலும் இறைவனது திருவருட் பேரொளி நிரம்பப்பெற்ற மாணிக்க வாசகப் பெருமான், திருமூல நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான சைவசமய ஆசிரியர்களும் முழுமுதற்கடவுளை நேரே காணுந் தவத்திருவுடையராய் அதனைப் பிறப்பு இறப்பில்லா அம்மையப்பராகவே வைத்துப் பரசினர். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடுத்துத் தோன்றிய பொய்கை பேய் என்னும் ஆழ்வார் இருவரும் சிலகாலமெல்லாம் ஆரியப் பார்ப்பனர் கட்டிவிட்ட புராண கதைகளில் மயங்கி யிடர்ப் பட்டனராயினும், தமக்குஇறைவன் திருவருளுருவைக் காணும் பெரும்பேறு வாய்த்தபின்

66

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்த” அம் முழுமுதற் கடவுளையே வணங்கி வாழ்த்தினர். மற்று, நம்மாழ்வாரோ இறைவனுருவை நேரே காணப்பெருமையின் தம் வாழ்நாள் எல்லையளவும் புராணகதைகளுட் போந்த மூவரையே தெய்வமென நம்பி இடர்ப்பட்டுப்,பாடித், திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அருள்செய்த தெய்வம் முழுமுதற் கடவுளா யன்றிப் பிறிதாதால் செல்லாதென்னும் அச்சத்தால் “அரனை அலற்றி வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன்” என முடிவிற் கூறி ஆறுதல் எய்தினார். உண்மையிலே தெய்வத்தன்மையுடைய பொய்கையாழ்வார் பேயாழ்வாருக்குத் தெய்வத்தன்மை உரையாமல், தெய்வத் தன்மையுங் கடவுளுணர்ச்சியுஞ் சிறிதும் இலரான நம்மாழ்வாரைப் பின்னுள்ளோர் கட்டிவிட்ட கதையின்கண் ஆராயாமற் சிக்குண்டு, தெய்வத்தன்மை யுடையரெனக் கிளந்த போலியுரையி னளவில் அமையாது, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளால் நேரே அருள் ல்

պ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/176&oldid=1588610" இலிருந்து மீள்விக்கப்பட்டது