பக்கம்:மறைமலையம் 23.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

ம்

9

விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான். பின் நீ என்செய்குவை.” என இதற்கு மேற்கோளுங் காட்டினார். இங்ஙனமே திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருக்கோவை யாருள்ளும், “அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் தக்கன் வேள்விமிக்க எரியார் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன்" எனவும், அருந்திய, அழித்த என இறந்தகாலச் சொற்களின் ஓதற்பாலன ‘அருந்தும்', 'அழிக்கும்' என எதிர்காலச் சொற்களின் வைத்து ஓதப்பட்டிருத்தல் காண்க. ‘அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல், புக்குப் பல்பலி தேரும் புராணனை என்று அப்பரும், தேர்ந்த என்று கூறற்பாலதனைத் ‘தேரும்' என்று எதிர்காலச் சொல்லின் வைத்துக் கூறுதல் காண்க. இங்ஙனமே "நரியைக் குதிரை செய்வானும்” என்றற் றொடக்கத் தனவும் இறந்த காலத்து நிகழ்ந்தவற்றை எதிர்காலச் சொற்களின் வைத்து ஓதின வாகலின், இவ்வுண்மை தேராது அவையெல்லாம் அப்பர்க்கு முன் நிகழ்ந்தனவாகாவென்றுரைத்த ‘தமிழ் வரலாறு' உடையார் கூற்றுப் பெரியதோர் இழுக்காதல் உணர்ந்து கொள்க.

995

னி, நரியைக் குதிரைசெய்ததாகிய திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டே இயற்றப்பட்டமை தொன்று தொட்டுவரும் வரலாறுகளாற் றுணியப்படுவதுடன் அடிகள் தாமே ‘திருவாசகத்'தின்கண் அருளிச்செய்திருக்கும் அருளுரை களானும் நன்கு தெளியப்படும். அவைதம்மை முன்னரே எடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். மேலும், “சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களி யானை வரகுணன்.” என்று அடிகள் திருக்கோவையாரில் அருளிச் செய்திருக்குஞ் சொற்றொடரிற் 'புகழும்' என நிகழ்காலச்சொல் வந்திருத்த லானே அடிகள் வரகுணன் காலத்தவர் என்பது பெறப்படும் என்று கூறிய 'தமிழ் வரலாறு’ உடையார் பின்னர்,

“நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்

பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையான்”

என்று அடிகள் அருளிச்செய்தவிடத்தும் அங்ஙனமே ‘ஏற்றும்' என நிகழ்காலச்சொல் வந்திருத்தல் கொண்டு, நரிபரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/18&oldid=1588209" இலிருந்து மீள்விக்கப்பட்டது