பக்கம்:மறைமலையம் 23.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

  • மறைமலையம் - 23

“வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க

மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா எம்பெரு மான்படி மக்கலங் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ

தோன்றினன் இரவியுந் துலங்கொளி பரப்பி அம்பர தலத்தின்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே”

என்றும்,

“ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி

யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமிக்

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம் மாதவர் வரவர் சாரணர் இயக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலி லவர்க்குநா ளோலக்கம் அருள

அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே’

என்றும் போந்த செய்யுட்களையும் இவற்றின் கருத்தோடு ஒருபுடையொத்த,

“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பூதங்க டோறும்நின்றா றாயெனின் அல்லாற் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லாற்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/181&oldid=1588618" இலிருந்து மீள்விக்கப்பட்டது