பக்கம்:மறைமலையம் 23.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

187

வரவேற்க, அவன் தன் மனைவியோடும் தம்பியோடும் அவ் வகலிகையின் அடிகளில் வீழ்ந்து வணங்கினன் எனவும் வான்மீகி இராமாயணம் புகலா நிற்கின்றது;ஆனாற், பின்வந்த காலிதாசரை யுள்ளிட்ட புலவரோ அவள் கல்லாகச் சமைக்கப்பட்டுக் கிடந்து இராமன் றிருவடிபடுதலும் பழைய உருப்பெற்று எழுந்தாள் என உண்மையைப் பிழைக்கப் கூறினர்.

இன்னும், வான்மீகி இராமாயணத்தின் முதற்கண்ண தாகிய பாலகாண்டத் துவக்கத்தில் நாரதர் இராமனது வரலாற்றினைக் கூறிமுடிக்கின்றுழி, அவன் இறந்தபின் பிரமலோக ஞ் செல்வான் என்று புகன்றனரே யன்றி, விட்ணுலோகஞ் செல்வான் என்று புகன்றிலர். இராமன் உண்மையிலே திருமாலின் பிறப்பா யிருந்தானேல், இறந்தபின் அவன் விட்ணுலோகஞ் சல்வானென்று விளம்புதல்

வேண்டும். மற்று அவ்வா றுரையாமையால் நாரதர் அவனை விட்ணுவின் பிறப்பென்று கொள்ளாமல், மக்கட் பிறப்பினருள் ஒருவன் எனவே கொண்டனரென்பது புலனாம். ஆனால், இதன் இறுதிக்கண் உள்ள ‘உத்தரகாண்டத்’திலோ நான்முகக் கடவுள் இராமனை அவனது முடிவுநாளில் தனது திருமாலுடம்பிற் புகும்படி வேண்டிக்கொண்ட ாரென முன்னதனொடு மாறுபட்டதொரு கதை காணப்படுகின்றது.பாலகாண்டத்தின் முதலில் இராமன் வரலாற்றினை எடுத்துரைக்கும் நாரதர் அவனைத் திருமாலின் அவதாரமென்று அதன்கட் சிறிதும் உரையா திருக்க, உத்தரகாண்டம் அதனொடு முரணி அவனைத் திருமாலின் பிறப்பாகக் கூறுதலானும், இங்ஙனமே பால காண்டத்தின் 15 ஆம் இயலும் தேவர்கள் திருமாலை அடைந்து இராவணனைக் கொல்லும் பொருட்டு

ராமனாகப் பிறந்தருளுக' எனக் குறையிரந்தார்களென முன்னதனொடு முரணக் கூறுதலானும், இராமன் திருமாலின் பிறப்பாயின் அவன்றன் மனைவி சீதை இலக்குமியின் பிறப்பாக வேண்டுமாகவும் அவளை அங்ஙனம உரையாது அவள் தனது முற்பிறவியிற், 'குசத்துவசன்' புதல்வியாகிய 'வேதவதி'யா யிருந்தனள் என்று இதன் யுத்தகாண்டம், 60 ஆம் இயல் உரை தருதலானும் பாலகாண்டத்தின் த்தின் இடையிடையே பல பகுதிகளும் உத்தரகாண்டமும் பின்வந்தோரால் நாளடைவே எழுதி எழுதிச் சேர்க்கப்பட்டமை தெற்றென விளங்கா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/196&oldid=1588639" இலிருந்து மீள்விக்கப்பட்டது