பக்கம்:மறைமலையம் 23.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் - 23

இயற்கைக்கு முற்றும் மாறான பொய்க்கதையேயாதல்போல,

அவன் திருக்கைலாய மலையைப் பெயர்த்தெடுத்தா

னென்பதும் ஒரு பொய்க்கதையே யாயினும், எல்லாம்வல்ல இறைவனை வழிபட்டு மக்கள் பேரின்பத்தையடைய வொட்டாது தடைசெய்து, பிறப்பு இறப்புக்களிற் பட்டுழன்ற ஓராண்மகனாகிய இராமனையே வணங்கி அம் மக்கள் தமது பிறவிப் பெரும்பயனை இழக்குமாறு செய்யும் இராம இராவணப் பொய்க்கதையின் இழிந்த நோக்கம் போலாது, சைவசமயச் சான்றோர் கட்டிய பிற்கதை இராம இராவணரின் சிறுமையும் சிவபிரான்றன் முழுமுதற் பெருமையுந் தெரித்து மக்களை அப்பெருமான் றிருவருட்பேற்றிற்கு உரியராக்கும் உயர்ந்த நோக்கம் உடை ட மையால், து பெரிதும் பயன்படுதலுடைத்தாம். இத்துணைப் பெரும்பயன் றருதல் பற்றியே இக் கதையை மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர்

முதலான சைவசமய ஆசிரியன்மார் தாம் அருளிய

திருப்பதிகங்களில் எடுத்து வழங்கினரல்லது, உலகவியற்கை மக்க ளியற்கைக்கு முற்றும் ஒவ்வாத அக் கதைகளைப் பேரறிவாளரான அவர்கள் உண்மையென நம்பி அங்ஙனஞ் செய்தார் அல்லர். இங்ஙனமே ங்ஙனமே அவர்கள் எடுத்தாண் கதைகளெல்லாம், எல்லாம்வல்ல முதல்வன்றன் அளவில் அறிவாற்றல்களையும், அவன் தன் மெய்யன்பர்க்கு உவந்து செய்யும் அருள்வழக்கங்களையும் நன்கு புலப்படுக்குந் திறத்தவாகலின், அவற்றை அந் நுண்பொருள்பற்றித் தழுவிக்கொள்வதல்லாமல், உலக நடையோடு ஒவ்பவா அவற்றின் பருப்பொருள் ஒன்றேகொண்டு அவற்றைத் தழுவுதல் எட்டுணையும் ஆகாது. எனவே, இன்னோரன்ன கதைகளை எடுத்தாளுதல் கொண்டு திருஞானசம்பந்தப் பெருமான் முதலான அறிவின் எல்லைகண்ட ஆசிரியர், சிற்றறிவினரும் நம்புதற்காகாத அப் பருப்பொருட் பொய்ந் நிகழ்ச்சிகளை மெய்யெனத் துணிந்து தழீ இயினாரென அவர் தம் உண்மைக் கருத்துணராது அவர்மேல் அந் நம்பிக்கையினை யேற்றல் ஏதமாமென்க. மேலும், இராவணன் என்பான் பத்துத்தலையும் இருபது கையும் உடையனா யிருந்தன னென்பது 'வான்மீகி ராமாயணத்’தின் பழைய பகுதிகளிற் சொல்லப்படாமையை மேலெடுத்துக் காட்டின மாகலானும்,

ராவணன் திருக்கைலாய மலையைப் பெயர்த்தெடுத்த கதை கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/201&oldid=1588646" இலிருந்து மீள்விக்கப்பட்டது