பக்கம்:மறைமலையம் 23.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 23

அதனை ஊனுடம்பு

காண்ட தனவே குறித்தது;

கடுவனிளவெயின னாரும் அம் முருகனைத் தெய்வமாகக் கொண்டாராயினும் அவ்வுண்மை பிழையாமல் அவன் மக்கள் யாக்கை யுடைய னென்னுந் தன்மை தோன்றவே மொழிந் திட்டார். ஆனாற், பிற்காலத்தில் வடமொழிக் கந்தபுராணம் இயற்றினவரோ அவனை முருகக்கடவுளாகக் கொண்டபின் அவனை மக்கள் யாக்கை யுடையனெனக் கூறுதற்கு ஒருப்படராய்ச் 'சிவபிரான் றன் ஆறு திருமுகங்களில் மிளிரும் நெற்றிக் கண்கள் ஆறினின்றுந் தோன்றிய ஆறு கனற்பொறிகளே ஆறு திருமுகங்களையுடைய முருகக்கடவுள் ஆயின' என்று அவ் வுண்மையைப் பிறழ்த்திக் கூறினார். இன்னோரன்ன மக்களைத் தெய்வமாகக் கருதுதலால்

பிழைபாடுகள் நேர்வனவாகும்.

இனிக், கடுவனிளவெயினனார் என்னும் நல்லிசைப் புலவரோ தங்காலத்து வழங்கிய வரலாற்றினைச் சிறிதுந் திரிபுபடுத்தாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்து உரைத்தலானும், அவருரைக்கும் அவ் வரலாற்றினால் முருகவேள்’ எனப் பயர் பெற்றோன் ஊனுடம்பு வாய்ந்தோதென்பதே பெறப்படுதலானும், நினைந்தவற்றை நினைந்தவளவே முடிக்கவல்ல இறைவன் ஊன் உடம்பு மேற்கொண்டானென்றல் அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காதலோடு றைவன் என்பான் வினைக்கீடாகப் படைக்கப் படும் ஊனுடம்பிற் பிறத்தலும் அதனை விட்டு இறத்தலும் இல்லான்' என்று வற்புறுத்துரைக்கும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டிற்கும் அது சிறிதும் இசையாமை யானும், சூர்மாவினை அடுதற்கு வந்த அம் முருகவேள் மக்கள் யாக்கையிற் பிறந்த ஓர் அரசிளைஞனேயன்றி எல்லாம்வல்ல முருகக்கடவுள் அல்லன் என்பது திண்ணமாம் ண்ணமாம் என்க. எம்மனோர்க்கு இருப்பிடமான இம் மண்ணுலகத்தினும், எமதூனக் கண்கட்குப் புலனாம் எண்ணிறந்த வான் மீனுலகங் களினும், எமது கட்புலனுக்கும் எட்டாத ஏனை எண்ணிறந்த உலகங்களினும் அளவிடப் படாத உயிர்களை ஒவ்வொரு நொடிப்பொழுதுந் தோற்றியும் அழித்தும் வரும்எல்லா ஆற்றலும் வாய்ந்த முதல்வனான முருகப் பிரான், மக்களுள் ஒருவனாகிய சூரன் என்பானை அழித்தற்கு உருவுகொண்டு படைதிரட்டியும் வருதல் வேண்டுமோ? அவன் நினைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/209&oldid=1588657" இலிருந்து மீள்விக்கப்பட்டது