பக்கம்:மறைமலையம் 23.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 23

இயற்கை யுண்மையுரை யாகாமை நன்கு விளங்கும். இம் மண்ணுலகத்தின் நில அடுக்குகளை அகழ்ந்து மக்கள் முதல்முதல் உண் ான காலத்தை நிலநூல் வல்லார் கண்டறிந்திருக்கின்றார்கள்; அக்காலம் முதல் இக்காலம் வரையில் அவர்களால் அகழ்ந் தெடுக்கப்பட்ட மக்களின் எற்புடம்புகள் எல்லாம், இஞ்ஞான்றுள்ள மக்கள் உடம்பின் அமைப்பைப்போல் ஒற்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடையவனவாய் இருக்கக் காண்டுமேயல்லாமல், அவற்றுள் ஒன்றேனும் ஒன்றுக்கு மேற்பட்ட தலையும் இரண்டுக்கு மேற்பட்ட கையும் உடையதாயிருத்தலைக் கண்டோமில்லை; மேலும், உடம்புநூல் வல்லால் ஓருடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தலையும் இரண்டுக்கும் மேற்பட்ட கையும் இருத்தல் இயலாதென்பதை நன்கு விளக்கிக்காட்டியிருக்கின்றனர்.

6

ஆகவே, இயற்கையில் எஞ்ஞான்றுங் காணப்படாத

ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் முருகவேளுக்குக் கூறல் அவன்றன் பேரறிவினையும் பேராற்றலினையுங் காட்டும் ஒரு புனைந்துரை வகையே யல்லாமல உண்மையன்றெனத் தெளிக.

இவ்வாறு முருகக் கடவுளை வழிபட்டு அவன்றன் அருளைப்பெற்ற முருகவேள் என்னும் வடநாட்டு அரசன் ஆரிய மன்னர்க்கும் முனிவர்க்கும் பெரும் பகைவனாய்த் தென்கடற் கண்ணே அரசு புரிந்த ‘சூர்மா’ என்னும் அரக்க அரசன்மேற் படையெடுத்து வந்து அவனை வென்றமையே பண்டுதொட்டு நிகழும் உண்மை வரலாறாம். முதலில் முருகவேளுக்குப் பெருந் தீது செய்தஇந்திரன் என்னும் ஆரிய அரசன், அம் முருகன் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்தவனாய் இருத்தலை ணர்ந்தபின்,அவனை அடிவணங்கி அவனைத் தனக்கும் தன்னவர்க்கும் ம் உதவியாக அமைத்துக்கொண்டமை வியப்பன்று. ஏனெனில், அறிவாற்றல் நாகரிகங்களிற் சிறந்த தமிழர்களைப் பண்டு தொட்டு ஆரியர்கள் தம் வழிப்படுத்தி வருதல் இத்தகைய கீழறுத்தல்களினாலேயாம். தமிழர்களைத் தாம் எதிர்த்து அழிக்கும் முயற்சி பயன்படாதெனக் கண்டால்,

னே அவர்க்கு அடிமைகளாய் அவர்க்குப் பணிந்தொழுகு வார்போற் காட்டி, அவருள் மிக்காரொரு பக்கத்தாரைத் தமக்கு உதவியாக்கி, அவரைக் கொண்டே அவருள் மற்றொரு பக்கத்தாரை யழித்துக் கெடுத்தல் அவ்வாரியர் இன்றுகாறுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/211&oldid=1588659" இலிருந்து மீள்விக்கப்பட்டது