பக்கம்:மறைமலையம் 23.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் - 23

இத்தென்னாடு புகுந்து குடியேறிய, ஆரியப் பார்ப்பனர் கண்டு, அவ் வரலாற்றினைத் தமது உயர்ச்சிக்கு இசைந்ததாம்படி திரிக்க விழைந்து, இலங்கையை ஆண்ட சூரன் என்னுந் தமிழ்மன்னனை இராவணனாகவும், அவனைப் பொருது மடித்த முருகனை இராமனாகவும் மாற்றி, அதனோடு பெரும்பாலும் ஒப்பவே இராமாயண கதையை வரவரப் பெருக்கி யெழுதலாயினர். இவ்வாறு அவ்வரலாற்றினை முதலிற் றிரித்து இராமாயண கதையை ஆக்கிய 'வான்மீகி' என்னும் வடமொழிப் புலவர், முருகனால் அடப்பட்ட சூரன் ஒற்றைத்தலையும் இரட்டைக் கைகளும் உடையனாகவே இருந்தமையின், அவனை இராவணப் பெயர் கொடுத்துத் தாம் மாற்றிய வழியும் அவனை ஏனை மக்களைப்போல் ஒன்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடையனாகவே வைத்துக் கூறினர். அவ் வான்மீகிக்குப்பின் இராமாயண கதையைப் பெருக்கியெழுதப் புகுந்த ஆரியப் பார்ப்பனர், சூரனைக் கொன்ற முருகனிலும் இராவணனைக் கொன்ற இராமனைச் சிறந்தோன் ஆக்குதற்குக் கருதி, ஒற்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடைய சூரனைக் கொல்லுதற்கு ஆறு தலையும் பன்னிரு கையுங் காண்டு வந்தது ஆண்மையன்று; பத்துத்தலையும் இருபது கையும் உடைய இராவணனைக் கொல்லுதற்கு ஒற்றைத்தலையும் இரட்டைக்கையும் உடை ய இராமனாய் வந்ததே ஆண்மையாம் என்பது போதர, ஆராய்ச்சியுணர்வில்லாத புல்லறிவினாரை மயக்கி, அவர் முருகக்கடவுள் வழிபாட்டைக் கைவிட்டு, இராமனைத் தெய்வமாகக் கைப்பற்றுதல் வேண்டி, இராவணனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும் உளவென்று கதைகட்டி, அதனை இராமாயணத்துள் நுழைப்பாராயினர். இவர் இங்ஙனஞ் செய்து இராமனைத் தெய்வமாக்குதல் கண்ட சைவசமயச் சான்றோர்கள், மக்களுள் ஒருவனாகிய அவனைத் தெய்வமாக்கி முழுமுதற் கடவுளாகிய சிவத்தை வணங்க வொட்டாமற் செய்யும் ஆரியரது தீச்செயலை யொழித்துச், சிவமே எல்லாம்வல்ல தென்பதனைக் காட்டக், 'கயிலை மலையைப் பெயர்த்த அப் பத்துத் தலை இராவணனின் இருபது கைகளையும் சிவபிரான் தமது காற்பெருவிரல் நுனியால் அம் மலைகீழ் அடர்த்து நெரித்தார்' நெரித்தார்' என்னும் பிறிதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/213&oldid=1588661" இலிருந்து மீள்விக்கப்பட்டது