பக்கம்:மறைமலையம் 23.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

205

கதையினைப் படைத்து, அதனை அவ்விராமாயணத்தின் 'உத்தரக் காண்டக்’கதை ஆக்கி, அவ்வாற்றால் இராமனது சிறுமையும் சிவபிரானது பெருமையுந் தெளியவைத்தனர்.

அற்றேல், வான்மீகி கூறாத பத்துத் தலையும் இருபது கையும்இராவணனுக்கு உளவாகக் கதைபுனைந்தோர் அவர்க்குப் பின்வந்த பின்னையோரேயென உரைப்பிற், பழைய தமிழ்க் கலிப்பாக்களின் தொகை நூலாகிய 'கலித்தொகை'யில் “இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனனாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிபொலி தடக்கையிற் கீழ்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன்போல'

وو

என்று ‘பத்துத்தலை யிராவணன், சிவபிரான் அமர்ந்த திருக்கைலாய மலையைப் பெயர்க்க

முயன்ற கதை எடுத்துரைக்கப்பட்டமை என்னையெனின்; அக்கதை கூறும் அப்பாட்டுள்ள குறிஞ்சிச் கலியை இயற்றியவர் கபிலர் என்னும் நல்லிசைப் புலவரே யாவரென்பது,

“பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன் மருத னிளநாகன் மருதம் - அருஞ்சோழன் நல்லுத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல், கல்விவலார் கண்ட கலி.”

என்னும் பழைய வெண்பாவால் அறியப்படும். இக் கபிலர், இருங்கோவேள்' என்னும் சிற்றரசனொருவனுக்கு நண்பர் என்பது, பாரி என்னும் வள்ளலின் மகளிரை அவன் மணந்து கொள்ளுமாறு அவர் அவனை வேண்டியும் வருந்தியும் பாடிய பாடல்களால நன்குவிளங்கும்.° இவ் விருங்கோவேள் என்னுங் குறுநிலமன்னன், தலையாளங் கானத்திற் பாண்டியன் நெடுஞ்செழியனொடு போர்செய்து அவனாற் கொல்லப் பட்டான்.இவன் அக் காலத்திருந்த சேரசோழ பாண்டியர்கட்குப் பெரும்பகைவனாயிருந்தமையின், இவனுக்குப் பின்வந்த இவன் சுற்றத்தாரை யெல்லாம் கரிகாற்சோழன் தொலைத்தான் என்பது "இருங்கோவேள் மருங்குசாய” என்பதனால்" விளங்காநிற்கும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/214&oldid=1588664" இலிருந்து மீள்விக்கப்பட்டது