பக்கம்:மறைமலையம் 23.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் - 23

பெற்ற ‘தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை, 'யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை' என்பவரையாதல், இவர்க்குப் பின் அரசுபுரிந்த ‘குடக்கோ நெடுஞ்சேரலாதனை' யாதல், 'சேரன்செங்குட்டுவனை' யாதல் மற்றச் 'சோழன் கரிகாற் பெருவளத்தான்', 'நெடுமுடிக் கிள்ளி, யென்பவரை யாதல் பாடிற்றின்மையின், அவர் இவர்கட்கு முன்னும் மாந்தரஞ் சேரலிரும் பொறையின் இளமைக் காலத்தும் இருந்தவராவ ரென்பதூஉம் யாம் இற்றைக்கு இருபஃது யாண்டுக்கு முன் ஞானசாகர மூன்றாம் பதுமத்தின் ஆறாம் இதழில் வெளியிட்ட 'திருக்குறளா ராய்ச்சி' ஆசிரியர்காலம் என்பதன்கண் நன்கெடுத்து விளக்கிக் காட்டினேம். அஞ்ஞான்று யாம் அந்நூல் எழுதிய போது, சேரன் செங்குட்டுவன் காலத்தவனான இலங்கைக் 'கயவாகு’மன்னன் காலம் கி.பி.113 முதல் 125 வரையிலொன்று வரலாற்று நூலாசிரியர்களாற் கொள்ளப் பட்டிருந்தது. அதனாற் செங்குட்டுவன் காலத்தைக் கீழ்வரையாக நிறுத்திக் கணக்குச் செய்துகொண்டு மேலேறிச் 'செல்வக்கடுங்கோ' கிறித்து பிறப்பதற்முன் 36ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏற்றினான் எனவும். அவன் காலத்தவரான கபிலர் கி.மு.முதல் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தார் எனவும் நிறுவினேம். ஆனால், இஞ்ஞான்று தோன்றிய வரலாற்று நூற்புலவர் கயவாகுமன்னன் காலத்தைத் திரும்பவும் நன்காராய்ந்து பார்த்து அவன் கி.பி. 171 முதல் 193 வரையிற் செங்கோல் ஓச்சினான் எனத் துணிந்துரைத்தலின், முன் செய்த காலக்கணக்கு இப்போது செய்திருக்குங் காலக்கணக்கு 58 ஆண்டுகள் கீழ் இறங்கி விட்டது. அதனாற் செல்வக்கடுங்கோவின் அரசு கி.பி. 22 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியதென்று கொள்ள வேண்டி யிருத்தலின் அவன் காலத்வரான கபிலரும் கி.பி.முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தா ரென்பதே இனிக் கொள்ளற்பாற்று.

L

இவ்வாறு கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த கபிலர், இராவணன் நொடித்தான் மலையைப் பெயர்த் தெடுக்க முயன்ற கதை கூறியது ஒரு வியப்பு அன்று. ஏனெனிற் கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்னரேயே அக் கதை படைத் தெழுப்பட்ட இராமாயணம் உத்தரகாண்டம் வழங்கினமை மேலே (398ஆம் பக்கத்தில்) விளக்கிக் காட்டினாமாக லினென்பது. இக் கதையும் கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/217&oldid=1588668" இலிருந்து மீள்விக்கப்பட்டது