பக்கம்:மறைமலையம் 23.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 “நெல்லரியும் இருந்தொழுவர்

செஞ்ஞாயிற்று வெயின்முனையின் தென்கடற் றிரைமிசைப் பாயுந்து'

,,

13

என்னும் புறப்பாட்டினால் (24) அறியப்படும். நெய்தல் நிலமாவது கடலுங் கடல்சார்ந்த இடமுமேயாகலான் மிழலைக் கூற்றமும் அதன் கண்ணதான திருப்பெருந்துறையும் கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதியிலிருந்த ‘வேள் எவ்வி'யின் காலத்தும், அவனை யடுத்து இரண்டு நூற்றாண்டுகட்குப் பின்வந்த அடிகள் காலத்தும் கடற்கரையைச் சார்ந்திருந்தமை தெற்றென விளங்காநிற்கும். அடிகளிருந்த காலத்திற்குப் பின் இப்போது ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் கழிந்தமையின், முன்னே திருப்பெருந்துறைக்கு அருகிலிருந்த கடல் இப்போது சிறிதேறக் குறையைப் பதினான்கு கல் விலகிப் போய்விட்டது.இதனாலும் அடிகள் காலம் மிகப் பழையதாதல் தெளியப்படும். திருப்பெருந் துறையை உள்ளடக்கிய இம் மிழலைக்கூற்றம் சோழநாட்டின் றென்பகுதியா யுள்ளதென்று ‘கனகசபைப் பிள்ளை' யவர்களும் தாம் இயற்றிய ‘பதினெண் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழர்’ என்னும் ஆங்கில நூலிற்° கூறினார். தஞ்சைக் கல்வெட்டு ஒன்றிலும், திருப்பூவனத்துச் செப்புப் பட்டயத்திலும் இம் மிழலைக்கூற்றங் குறிப்பிடப்பட்டுளதெனவும், 'திருப்பெருந் துறை’, ‘துஞ்சலூர்’, ‘தண்டலை' என்னும் ஊர்கள் இக் கூற்றத்தைச் சேர்ந்தவையாமெனவுங் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்காரரா யிருந்த வெங்கையரவர்களும் புறநானூற்றுப் பதிப்புக் குறிப்பொன்றில் எழுதியிருக்கின்றார். இறைவன் எழுநூறு நரிகளைக் குதிரைகளாக உருமாற்றிய ஏதுவினால் எழுநூற்று மங்கலம்' எனப் பெயரிதோர் ஊறும் திருப்பெருந் துறைக்கு இரண்டு நாழிகை வழிக்கு அப்பால் உளதென்று திருவாளர் சாமிநாதையரவர்களும் குறிப்பெழுதியிருக் கின்றார்கள்" ஆகவே, மாணிக்கவாசகர் குதிரை கொள்ளச் சென்ற கடற்றுறைப் பட்டினம், சோழநாட்டின் தென்பகுதிக் கண்ணதான மிழலைக் கூற்றத்திற் சேர்ந்த திருப்பெருந் துறையேயா மென்பது தெளிந்து கொள்க. மேலும், மாணிக்க வாசகர் சேரநாட்டில் உள்ள பெருந்துறைக்குச் சென்றா ரென்பதற்கு அவரைப் பற்றிய எந்த நூலுள்ளும் எங்கும் ஏதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/22&oldid=1588228" இலிருந்து மீள்விக்கப்பட்டது