பக்கம்:மறைமலையம் 23.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

221

அவன்முன் நிற்கலாற்றாது தோற்றோடினர் என்னும் ஒரு பெரும் புளுகுரையைப் புதிது படைத்து அதனை வைணவர்கள் அப் பாரதக் கதையினுள் நுழைத்திருக் கின்றனர். இப் பெரும் புளுகு, வைணவ மதம் சைவத்தின் வேறாய்ப் பிரிந்து தனியே கிளர்ச்சிபெற்ற திருமங்கையாழ் வாரது காலத்தேதான் படைக்கப்பட்டுப் பாரதக் கதையினுள் நுழைக்கப்பட்டதாதல் வேண்டும். ஏனென்றாற், கண்ணன் வாணனொடு புரிந்த போரிற் சிவபிரான் வாணனுக்குத் துணையாய் வந்தெதிர்த்தாரென்பது 'சிலப்பதிகாரம்' முதலிய பழைய நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்படவில்லை. வைணவ சமயத்திற்கு முதலாழ்வார் களான மூவருட் ‘பேயாழ்வா’ருங் கூட.

66

'நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள் ஒன்றியஈ ரைஞ்நூ றுடன்துணிய - வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான்

எனவும்,

وو

“மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன் மகனாம் அவன்மகன்றன் காதல் - மகனைச் சிறைசெய்த வாணன்றோள் செற்றான்”

(80)

(12)

யல்லாமல்,

6 எனவும் அருளிச் செய்திருக்கின்றனரே அப்போரின்கட் சிவபிரான் வந்தெதிர்த்துத் தோற்றோடினர் என ஓர் அணுத் துணையாயினும் மொழிந்தனர் அல்லர். வாணன் போரிற் சிவபிரானது தொடர்பு முதலாழ்வார் பாடல்களினும் ஏனைப் பழைய நூல்களினும் ஏதுமே காணப்படாதாகத், திருமங்கையாழ்வாரோ,

"வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான்

வெள்கியோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித் துகந்தான்”

(7.6)

என்றாற்போலப் பலவிடங்களில் அதனைத் தொடுத்துச் சொல்லிச் சிவபிரானை இகழ்கின்றார்.

ஆயினும்,இவர், திருமழிசை யாழ்வாரைப்போல் வரை கடந்து சிவத்தை இகழ்ந்து பேசிற்றிலர். வாணன் போரிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/230&oldid=1588684" இலிருந்து மீள்விக்கப்பட்டது