பக்கம்:மறைமலையம் 23.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 23

சிவபிரான்த் தொடர்பு படுத்தித் திருமழிசையாழ்வார் இகழ்ந்துரைப்பனவற்றிற் சில காட்டுதும்:

“மோடியோடி லச்சையாய சாபம்எய்தி முக்கணான் கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்து ஓடவாணன் ஆயிரங் கரம்கழித்த ஆதிமால்.

66

இண்டவாணன் ஈரைஞ்ஞாறு தோள்களைத் துணித்தநாள் முண்டநீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிட.’

وو

(திருச்சதக விருத்தம், 53, 71.)

'அவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை கண்டீர் - உவரிக்

கடல்நஞ்சம் உண்டான் கடனென்று வாணற்கு உடனின்று தோற்றான் ஒருங்கு.

99

(நான்முகன் திருவந்தாதி, 56)

இவையேயன்றி இவர் சிவபிரானை இகழ்ந்து பாடியவை இன்னும் பல. மேலும், இவர் சமணர் புத்தர்களோடு சைவரையும் உடன்சேர்த்து,

“அறியார் சமணர் அயர்த்தார் பவுத்ர்

சிறியார் சிவப்பட்டார்’

என மிகவும் பழித்துப் பேசுதலின் வர் சைவ சமயத்தவரைப் பெரிதும் பகைத்தவரென்பது புலனாம். இப்பெற்றியினரான இத்திருமழிசை யாழ்வார் சைவசமய ஆசிரியன்மார்க்காலத் திருந்தனராயின் அவர்க்கும் இவர்க்கும் வழக்கு நேராதிராது. மற்று, அவர்க்கும் இவர்க்கும் வழக்கு நேர்ந்தமைக்கு இவர் தம் பாடல்களிலாதல் தேவாரப் பாடல்களிலாதல் ஏதொரு குறிப்புங் காணப்படாமை யானும், தேவாரப் பதிகங்கள் ஒவ்வொன்றிலும்திருமால் சிவபிரான் திருவடியைத் தேடியறியாக் குறைபாடு சொல்லப்படுதலின் தேவார காலத்தில் வைணவ மதம்கிளர்ந்து நில்லாமை யறியப்படுதலானும், பெளத்த சமணர்களோடு வழக்காடி அம் மதங்களைத் தொலைத்தவர்கள் சைவ ஆசிரியரென்பதற்கே க சான்றுகள் காணப்படு தலல்லாமல், வைணவ ஆழ்வார்கள் அவர்களோடு அங்ஙனம் வழக்கிட்டமைக்குத் தினைத்தனைக் குறிப்பும் யாண்டுங் காணப்படாமையானும், பௌத்த சமண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/231&oldid=1588685" இலிருந்து மீள்விக்கப்பட்டது