பக்கம்:மறைமலையம் 23.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

.

229

மை

வழிபட்டுக் கார்த்திகேயனை (முருகவேளை)ப் பெற்று அவனைத் தன் படைத் தலைவனாக அமைத்துக் கொண்ட நுவலப்பட்டிருக்கின்றது. அதன் 43ஆம் இயலில், பகீரதன் வானுலகத்திலிருந்த கங்கையை மண்ணுலகத்திற்குக் கொணரும் பொருட்டு நான்முகனை வேண்டிப் பெருந்தவம் புரிந்த காலையில், அக்கடவுள் அவன் முற்றோன்றிக் கங்கையின் ஆற்றலைத் தாங்கி அதனை நிலத்து உய்க்கவல்லான் சிவபிரான் ஒருவனே யாதலால் அப்பெருமானை நோக்கி அதுவேண்டித் தவம்புரியக் கடவாய் என ஏவி மறைந்தமையும், 44 ஆம் இயலில் அங்ஙனமே அவன் சிவபிரானை நோக்கிக் இரங்கி அவன் வேண்டியபடியே கங்கையைத் தனது சடைக்கட்டாங்கி நிலத்து உய்த்தமையும் நுவலப் பட்டிருக்கின்றன. இஃது இங்ஙனமாகவும், பிற்காலத்தில் வந்த வைணவப் புலவர்கள் சிவபிரானை இழித்தற்பொருட் விஷ்ணுவின் அடிகளிலிருந்து விழுந்த கங்கையைச் சிவபிரான் சடையிற் இராமாயணத்திற் காணப்படாத ஒரு புளுகுரையைப் புதிது படைத்துத் தாம் புனைந்த புராணங்களில் நுழைப்பாராயினர். விஷ்ணுவே தம் அடிகளிற் கங்கையைத் தாங்கிவிட வல்லுநராயின், நான்முகக் கடவுள் அவரை நோக்கியே தவம்புரியுமாறு பகீரதனை ஏவியிருக்கலாமன்றோ? மற்று நான்முகன் அது தாங்குதற்குவல்லார் சிவபிரானே என மொழிந்ததும், அம்மொழிப்படியே பகீரதன் சிவபிரானை நோக்கித் தவம்புரிந்து தன்குறை முடித்ததும் பண்டுதொட்டு உலகம் அறிந்த உண்மைகளாகலின், இவற்றைத் தம் புளுகுரையால் மறைக்க முயலும் பிற்காலத்து வைணவர் தம் புல்லிய முயற்சி சிறிதும் நிறைவேறாது.ஆகவே, திருமழிசை யாழ்வார்,

66

றாங்கினார்

"குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து

மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு”

என

(நான்முகன் றிருவந்தாதி, 9)

எனப் புகன்ற இழிப்புரை பொய்யுரையாதலோடு, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை இகழ்ந்த பெருந் தீவினைப் படுகுழியிலும் அவ் வாழ்வாரை வீழ்த்துதல் காண்க. அஃதொக்கும், அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/238&oldid=1588693" இலிருந்து மீள்விக்கப்பட்டது