பக்கம்:மறைமலையம் 23.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

237

நிலைநிறுத்தும் ஒரு பெருஞ்சான்றாம். சிவபெருமான் முப்புரங்களை நீறாக்கிய பின்னர் ஐந்து குடுமியோடு கூடிய ஒரு சிறுமகவாய் உமைப்பிராட்டியாரின் மடிமீது அமர்ந்திருந் தனன். அப்போது தேவர்கள் எல்லாரும் 'இவன் யார்? இவன் யார்? என்று தம்முளே வினவியும், அவனை யறிந்திலர். அதனால் இந்திரன் பொறாமையுற்றுத் தனது குசலிப் படையால் அக் குழவியை எறியப்புக, அஃது அப்படையினைத் தடைசெய்து, அவன் கை வழங்க மாட்டாமல் தடிபோல் மரத்துநிற்கப் பண்ணிற்று. அந் நிகழ்ச்சியைக் கண்டு தேவர்களெல்லாரும் வெருவி, நான்முகன்பாற் சென்று நிகழ்ந்தவற்றை யறிவிப்ப, அவன் தனது அறிவுக்கண்ணாற் கண்டு அம்மகவு எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபிரானாதலை உணர்ந்து, அப்பெருமானை வழுத்தினான்; அதன்பிற் றேவர்களெல் லாரும் உமை காதலனை வணங்கினர்; இந்திரனும் எப்போதும் போலத் தனது கை வழங்கப்பெற்றான்' என்று இதனை இன்னும் விரிவாகக் கண்ணனே மொழிந்தமை அநுசாசனபருவம், 7458 ஆம் செய்யுளிலிருந்து சொல்லப் பட்டிருக்கின்றது. இத் தன்மையவான மிகப் பழைய வடநூற்சான்றுகளுக்கெல்லாம் மாறாக இயக்க வடிவில் வந்த றைவனை நாராயணன் என்றதூஉம், உண்மை பிறழ்ந் துரைக்குந் தமதுரைக்குச் சான்றாகத் தாமே புதிது புனைந்த பொய்க்கதைக் கூளங்களாகிய புராணங்களை மேற்கோளாக எடுத்துக்காட்டியதூஉம், இராமாநுஜர் மாத்துவர் என்னும் உரைகாரருக்குப் பெரிதும் ஏதமாமென்க.

இனி, உபநிடதங்களினும் மிகப் பழைமையாவன 'பிராமணங்கள்' ஆகும். இவற்றுள்ளும் மிகப் பழையது ஐதரேயபிராமணம். இதன் மூன்றாம் இயல், முப்பத்துமூன்று முப்பத்துநான்காம் பகுதிகளிற் பின்வருமாறு சொல்லப் பட்டிருக்கின்றது: பிரஜாபதி தன் மகளைத் தானே புணர்ந்தமை கண்ட தேவர்கள் வருந்திப் “பிரஜாபதி முன் அறியப்பட்ட ஒரு செய்கையைச் செய்கின்றான்”என்று கூறி, அவனை ஒறுத்தற்கு ஒருவனைத் தேடினார்கள். தமக்குள் அவனை ஒறுக்கத்தக்க ஆற்றல் உடையார் எவரும் இல்லாமையின், அஞ்சத்தக்க உருத்திரனை நாடி அவனை ஒறுக்குமாறு வேண்ட, உடனே உருத்திரன் அதற்கு இயைந்து தனது மூவிலைவேலாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/246&oldid=1588702" இலிருந்து மீள்விக்கப்பட்டது