பக்கம்:மறைமலையம் 23.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் - 23

பிரஜாபதி பிரானை குத்தி ஒறுத்தான். அதன்பிற் றேவர்கள் சிவபிரானை இருக்கு வேதவுரையால் வழுத்தி வணங்கினர்.

இருக்குவேதத்தைச் சேர்ந்த மற்றொரு பிராமணமாகிய களஷீதகியின் ஆறாம் இயல் முதன் ஒன்பது செய்யுட்கள் வரையிற் சிவபிரான்றன் பெயர்களாகிய பவன், சர்வன், பசுபதி, உக்ரதேவன், மகாதேவன், உருத்திரன், ஈசானன், அசனி முதலியவற்றால் அவனே முழுமுதற் கடவுளாதல் காட்டப்

பட்டது.

இப் பெயர்களைக்கொண்டே சிவபிரான் வாஜசநேயசம்ஹிதை (39,8, 9) யிலும் மைத்திராயணீ சம்ஹிதை (2, 9, 1)யிலும், அதர்வ வேதத்திலும் (15, 5) வழுத்தப்படுதல் காண்க. இவ்வுண்மைகளை யெல்லாம் நடுநிலைதிறம்பாமல் ஆராய்ந்துபார்த்த ஐரோப்பிய ஆசிரியர்கள் பிராமணங்கள் உண்டான மிகப் பழையகாலத்திற் சிவபிரான் ஒருவனே முழுமுதற்கடவுாக வைத்து வணங்கப் பட்டனன் என்று மெய்யுரை கூறினர்.23 இங்ஙனமே, ‘சாங்காயன பிராமணத்’திலும் சுக்லயஜுர் வேத்தைச் சேர்ந்த ‘சதபதபிராமணத்’திலும் (2, 6, 2, 9) சிவபிரானும் அம்பிகையும் ஒருங்கு வைத்து முழுமுதற் கடவுளாக வணங்கப்படுதல் காண்க.

பிராமணங்கள் ஆக்கப்பட்ட பண்டைநாளில் விஷ்ணு ஒரு சிறந்த தெய்வமாகக் கருதப்படவில்லை. பிராமணங்களுட் காலத்தாற் பிற்பட்டதாகிய சதபதபிராணமத்திலே தான் முதன் முதல் விஷ்ணுவுக்கு ஓர் உய்ச்சியுண்டானமையும், அதனால் விஷ்ணு இறுமாப்படைந்து தன்னை ஏனைத் தேவர்களி னின்றும் வேறு பிரித்துக் கொண்டு சென்று நாணேற்றிய தன் வில்லின் முனைமேற் றன் மோவாயை வைத்தபடியாய்ச் செருக்குற்று நிற்பத், தேவர்கள் எறும்புகளை ஏவி அவனது வில்லின் நாணைக் கடித்து அறுக்கும்படி செய்ய, உடனே அவ்வில் கடுவிசையோடும் நிமிர்ந்து விஷ்ணுவின் தலையை அறுத்துக் கொண்டு சென்றமையும் சொல்லப்பட்டிருத்தல் காண்க.24 விஷ்ணு இங்ஙனந் தலையறுப்புண்ட செய்தியைக் கூறும் சதபத பிராமணமே, உருத்திரபிரான் விடுத்த கணையாற் பகன்கண் இழந்ததும், பூஷன் பல்லுதிர்ந்ததும், இவற்றைக் கண்ட தேவர்களெல்லாரும் நடுக்கம் எய்திச் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற் பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/247&oldid=1588703" இலிருந்து மீள்விக்கப்பட்டது