பக்கம்:மறைமலையம் 23.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

27

  • மறைமலையம் - 23

கொண்டு, பின்னர் ஒரு வேட்டுவன் ஏவிய கணையால் இறந்துபட்ட கண்ணனுக்குச் சிவபிரான் தோற்றோடினா ரென்னுங் கதையினும் முழுப்புரட்டும் பொய்யுமாவது பிறிதில்லையென விடுக்க.

ங்ஙனமாக வைணவமதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்ற கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த திருமங்கை யாழ்வார் அக்காலத்து வைணவப்புலவர்கள் வடமொழியில் தமக்குவேண்டியபடி யெல்லாங் கட்டி விட்ட கதைகளை மெய்யென நம்பினராயினும், சைவசமய ஆசிரியர்கள் அருளிச்செய்த தேவார திருவாசகங்களையும் வடமொழி யிலுள்ள வேதங்கள் பிராமணங்கள் பழைய உபநிடதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் முதலிய வற்றையும் அவர் நன்கு ஓதியுணர்ந்த புலவராய்க் காணப்படுதலின், காணப்படுதலின், சிவபிரான் இறைமைத் தன்மையை நாட்டும் பழைய வரலாறுகளையும்

மேற்காட்டியவாறு

இடையிடையே தம் பாட்டுகளிற் களங்கமின்றி எடுத்து மொழிந் திடுகின்றார். அதுவேயுமின்றிச், சிவபிரானும் திருமாலும் பிரிவின்றி ஒரு வடிவினராய்த் திகழ்கின்றனர் எனவும் பலவிடத்துங் கூறுகின்றார். அவற்றுட் சில வருமாறு:

"பிணங்கள்இடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு

இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்."

“பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து.”

(2,6,9)

(3,4,9)

“அலர்மகட்கும் அரற்கும்

கூறாகக் கொடுத்தருளுந் திருவுடம்பன்”

(3,9,8)

“வானார்மதி பொதியும்சடை மழுவாளியொடு ஒருபால்

தானாகிய தலைவன்.”

(7.9.4)

“வாசவார் குழலாள் மலைமங்கைதன்

பங்கனைப் பங்கில்வைத்து உகந்தான் றன்னை.'

(7,10,3)

“கண்ணுதல் கூடிய அருத்தனை.”

(பாதியனை, 7,10,7)

"மழுவியல் படையுடை யவன்இடம் மழைமுகில் தழுவிய உருவினர்.”

(8,7,6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/253&oldid=1588710" இலிருந்து மீள்விக்கப்பட்டது