பக்கம்:மறைமலையம் 23.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

17

அடிகளோடு வழக்கிட்டிருத்தல் வேண்டுமன்றே! அங்ஙனம் பக்கத்திருந்த பௌத்தர்கள் வழக்கிடாமல், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமே தில்லைக்குப் போந்து அவரொடு வழக்கிட்டாரென்பது என்னையெனிற்; பௌத்தமத முதலாசிரியராகிய

கௌதமசாக்கியர் அருளறத்தின் சிறப்பையும் பயனையுமே அறிவுறுத்த வந்தவ ரென்பதூஉம், அவர் அறிவுறுத்தவைகளெல்லாம் சைவ சமயக் கோட்பாடு களோடு முழுதொத்தனவேயா மென்பதூஉம் முன்னரே நன்கு விளக்கிக் காடடியிருக்கின்றேம். அவர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர்களே அவ்வாசிரியர் கூறாத 'சூனியவாதம்' ஆகிய இல் வழக்குப் பேசிப் பற்பல பொருந்தாக் கொள்கைகளைக் கட்டிவிட்டமையும், அங்ஙனங் கட்டிவிட்டோருள் முற்பட்டவ ராகிய சௌத்திராந்திக பௌத்தரின் மாயாவாதக் கொள்கை களும் கௌதமர் பாளி மொழியில் அறிவுறுத்திய அறிவுரைகளும் பொருந்த ஈனயான பௌத்தம் இலங்கைத்தீவின் மட்டுமே பண்டு தொட்டுப் போற்றி வைக்கப்பட்டமையும், ஒவ்வாத மாயாவாத பௌத்தத்தை மக்களிடையே பரவச்செய்தல் இயலாதது கண்டு கி.பி. முதல் நூற்றாண்டில் நாகார்ச்சுனர் என்னும் பௌத்தகுரு ஒருவர் சைவசமயத்தில் ஓர் உட்பிரிவாகிய சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்திப் புதுக்கிய மகாயான பௌத்தமே பின்னர் இமயத்தின் வடக்கே தொட்டுத் தெற்கே குமரியீறாகப் பரவலாயினமையும் அடிகளது வரலாற்றில் விளக்கிக்காட்டியிருக்கின்றேம்.

உலகவழக்கோடு

அவ்வாறு காட்டியதுகொண்டு, அடிகள் காலத்தில் இவ்விந்தியநாடு முழுதும் - எனவே அதன் பகுதியாகிய இத் தமிழ்நாடு முழுதும் பரவியிருந்தது ‘மகாயான பௌத்தமே' யல்லாமல் ‘ஈனயானபௌத்தம்' அன்றாதல் பெறப்படும். ஈனயானம் இலங்கையின் மட்டுந்தான் வழங்கிய தொன்றாகும். சைவ சாத்த மதங்களின் கோட்பாடுகளைத் தழுவித் திருத்திய மகாயான பௌத்தமே' இவ் விந்திய நாடெங்கும் பரவியிருந்த தென்பது.வடமொழியில் மிக வல்லுநராய் விளங்கிய வித்தியா பூஷணம் அவர்கள் எழுய 'இந்தியநாட்டு வரலாறு’5 என்னும் நூலிலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. மாணிக்க வாசகர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முற்பட்டதாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/26&oldid=1588248" இலிருந்து மீள்விக்கப்பட்டது