பக்கம்:மறைமலையம் 23.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

255

மெல்லாம் சிறிதேறக்குறைய ஒரே காலத்திலிருந்தவராவர் எனலாம். பெரியாழ்வார் சிவபெருமானை ஒரொவழி இழித்துப்பேசுவர் இவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரோ மாயோன்மேல் வைத்த பெருங்காதலால் அவனை யன்றிப் பிறிதொன்றனை நினைக்க மாட்டாராயினர்; து காதலிற் சிறந்த பெண்பாலார்க்கு இயற்கையாதலை இறையனாரகப் பொருளில் “தானே யவளே என்னுஞ் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த விழுமிய உரையிற் காண்க: ஆதலால், இப் பெண்மணிார் சிவபிரானை நினைந்து இகழ்தற்கு இடம் பெற்றிலரென்க. இவர் ‘திருவாசகத்’தைப் பயின்றவ ரென்பதற்குத் திருமொழியில் இவர் பாடிய,

வானிடை வாழும்அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதுஞ் செய்வதொப்ப

ஊனிடை யாழிசங் குத்தமர்க் கென்றுன்னித் தெழுந்தஎன் தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

என்னுஞ் செய்யுளைத், திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமான் அருளிச்செய்த,

உங்கையிற் பிள்ளை யுனக்கே அடைக்கலமென்று அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போங்கேள் எங்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கு இப்பரிசே எமக்குஎங்கோன் நல்குதியேல்

எங்கு எழில்என் ஞாயிறுஎமக்குஏலோ ரெம்பாவாய்

(19)

என்னுந் 'திருவெம்பாவை' செய்யுளோடுஒப்பிட்டு நோக்குக. நாச்சியாரின் செய்யுள் நடையானது பிற்காலத்தார் செய்யுள் நடையை யொத்திருத்தலும், அடிகளின் செய்யுள்நடையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/264&oldid=1588721" இலிருந்து மீள்விக்கப்பட்டது