பக்கம்:மறைமலையம் 23.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 23

தம் பாடல்கள் பெற்ற திருமால் திருக்கோயில்கள் பலவாயும், ஏனையாழ் வார்களின் பாடல்கள் பெற்ற திருமால் திருக்கோயில்கள் சிலவாயுங் காணப்படுகின்றன. எனவே, இவ் வாழ்வார்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் இருந்தமை மறுக்கப்படாத உண்மை யாமென் றுணர்.க

இனிப், பொய்கையாழ்வார் ஏனையாழ்வார்கட் கெல்லாம் முற்பட்டவ ரென்பது எல்லார்க்கும் உடம்பாடாகலானும், சைவ சமயாசிரியரும் பிறருமெல்லாம் 'விருத்தப்பாட்டு' களினாலேயே சிவபிரானை மிகுதியாய்ப் பாடியிருக்கப், பொய்கையார் பழைய தமிழ்யாப்பவாகிய 'வெண்பாவினா' லேயே திருமாலைப் பாடியிருத்தலானும், இவர் சங்கத்தமிழ் நூல்களுட் சேர்ந்த 'களவழி” 'இன்னிலை" என்னும் நூல்களை வெண்பாவில் இயற்றிய பொய்கை யாரே யாவரென ஒருசாராரும், சோழன் கோச்ங்ெகண்ணானொடு பொருது சேரமான் கணைக்காலிரும் பொறை தோற்று அவனாற் சிறையிடப்பட்டவழிக் களவழி என்னும் நூலைப் பாடி அச் சேரமானைச் சிறைவிடுவிடுத்த பொய்கையார் என்னும் நல்லிசைப் புலவருங் கடைச்சங்க காலத்தவரே யாயினும் அவர் இன்னிலை' பாடிய பொய்கையாரின் வேறேயாவரெனப் பிறிதொரு சாராரும், பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்திருந்த பொய்கையார் அல்லரென மற்றை யொரு சாராரும் புகலாநிற்பர். இம் முத்திறத்தார் கோட் பாடுகளுள் உண்மையானதூஉம் ஆகாததூஉம் ஆராய்ந்து காட்டுதல் இன்றியமையாததா யிருத்தலின், அவற்றையும் சிறிது ஈண்டு ஆராய்வாம் வெண்பா யாப்பினாற் பாடியிருத்தல் ஒன்றே கொண்டு பொய்கையாழ்வாரைச் சங்ககாலத்தவ ரென்றல் அமையாது. பழந்தமிழ்ப் பாக்களாகிய அகவல், கலி, வஞ்சி என்பன வரவர வழக்கு வீழ்ந்தாற்போல, வெண்பா இன்றுகாறும் வழக்கு வீழ்ந்த தின்று. அகவற்பா இசையோடு கலந்து விட்டுவிட்டு ஓதுதற்கு இசையாதாய் உரைநடைபோல ஓர் சையாய் நீண்டு செல்லுதலிற், பல்வகை இசைகளு விட்டுவிட்டு இனிமையாய் ஓதுதற்கு இசைந்த விருத்தப்பாட்டுத் தோன்றிப்பெரிது வழங்கப் புகுந்த, காலந்தொட்டு அது வரவர வழக்கு வீழ்ந்தது. கலிப்பாட்டோ எல்லாரும் ஓதுதற்கு ஆகாப்

ரு

ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/267&oldid=1588724" இலிருந்து மீள்விக்கப்பட்டது