பக்கம்:மறைமலையம் 23.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

259

பல்வகை இசைதழுவித் தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம், கொச்சகம்,அராகம், அம்போதரங்கம் முதற்பல உறுப்புக் களையுடைத்தா யிருந் தமையின், அதுவும் வழக்கு வீழ்ந்தது. வஞ்சி பாட்டோ கடைச் சங்கத்தார் காலத்திலேயே பயிலாது வீழ்ந்தது. மற்று, வெண்பா யாப்போ விருத்தப் பாட்டுப்போல இடைவிட்டு விட்டு இசையோடு ஓதுதற்கு எளிதாய் நிற்றலின், அஃது இன்றுகாறும் வழக்கு விழாது வழங்கா நிற்கின்றது.கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிற் செய்யப்பட்டதாகிய பாரத வெண்பாவும், கி.பி. பன்னிராண்டாம் நூற்றாண்டின் இடையில், இயற்றப்பட்ட நளவெண்பாவும், பன்னிரண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்பா யாப்பில் இயற்றப்பட்டு வந்த ‘மூதுரை’ 'சிவஞானபோதம் வினா வெண்பா 'சிவசிவவெண்பா' 'சோமமேசர் முதுமொழி வெண்பா' முதலான அறநூல்கள் அறிவு நூல்களுமே அதற்குச் சான்றாம். ஆதலால்,வெண்பா யாப்பில் திருமாலைப் பாடி யிருத்தல் ஒன்றேகொண்டு பொய்கை யாழ்வாரைக் கடைச்சங்க காலத்தவராக வைத்துரைத்தல் பொருந்தாதெனவிடுக்க.

மேலும், பொய்கை பேய்பூதம் என்னும் முதலாழ்வார் மூவரின் வெண்பாயாப்பின் இயல்பினையும், சங்க காலத்துப் பொய்கையார் இயற்றிய 'களவழி’ இன்னிலை' என்னும் நூல்களிலுள்ள வெண்பாயாப்பின் இயல்பினையும் புடை படவைத்து ஆராய்ந்து பார்ப்பின், ஆழ்வார்களது வெண்யாப்புப் பிற்பட்ட கால அமைப்பினையும், 'களவழி' 'இன்னிலை’யின் வெண்பாயாப்பு முற்பட்டகால அமைப்பினையும் பெற்றிருத்தல் இனிது விளங்காநிற்கும். யாங்ஙனமெனிற் காட்டுதும்; ‘களவழி’யில் வட சொற்களெனக் காணப்படுவன: முரசம், பூ (நிலம்), பவளம், குஞ்சரம், கும்பம், கார்த்திகை, மதி,திசை, மதம், கேடகம், உவமன், தாலம் எனப் பன்னிரண்டாகும். இவற்றுள் முரசம், குஞ்சரம், திசை, உவமன் என்பன மிகப் பழைய தொல்காப்பியத்திற் காணப்படுதலின், இவை தமிழிலிருந்தே வடமொழிக்கட் சென்று வழங்கினவா யிருக்கலாமேனும், இப்போது இவற்றையும், பவளம், மதி முதலியவற்றையும் வட சொல்லெனவே கொள்வார் உளராகலின் இவற்றையும் வட சொல்லெனவே வைத்து எண்ணினாம். ஆகவே களவழி நாற்பத்தொரு செய்யுட்களிலுங் காணப்படும் வடசொற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/268&oldid=1588725" இலிருந்து மீள்விக்கப்பட்டது