பக்கம்:மறைமலையம் 23.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

6

261

பொய்கையா ரியற்றிய களவழி, 'இன்னிலை' என்ளபவற்றின் வடசொற் கலப்பு மிகச் சிறிதாயும் பொய்கையாழ்வா ரியற்றிய ‘அந்தாதி’யில் அஃது அதனளவிற்கு மிகக் பெரிதாயும், அங்ஙனங் கலந்த அவ்வட சொற்கடாமுங் கடைச்சங்க நூல்களில் வழங்காதனவாயும் இருத்தலின், இப் பெயர்பூண்ட இருவரது வெண்பாயாப்பும் வெவ்வேறு காலத்தில் இயற்றப் பட்டனவாதல், வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கும். எனவே, களவழி, இன்னிலை என்னும் நூல்களையியற்றிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவரென்பதூஉம், 'முதற்றிரு வந்தாதி' பாடிய பொய்கையாழ்வார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராரென்பதூஉந் தாமே பெறப்படும்.

பொய்கையார்

இனிக், களவழி, இன்னிலை என்னும் நூல்களிலுள்ள வெண்பாயாப்பின் இலக்கணத்தையும், பொய்கையாழ் வாரது அந்தாதியிலுள்ள வெண்பாயாப்பின் இலக்கணத் தையும் ஒப்பிட்டு நோக்கும்வழி, முன்னைய இரண்டும் அவ் விலக்கணத்தில் ஒத்துநிற்றலும், பின்னையது அதனின் வேறாய் நிற்றலும் புலனாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: ஆசிரியர் தொல்காப்பியனார், வெண்பாயாப்பிற்கு அடிவரை யறை செய்கின்றுழி,

நெடு வெண்பாட்டு முந்நால் அடித்தே குறு வெண்பாட்டிற்கு அளவு எழுசீரே1

என்னுஞ் சூத்திரத்தால் 'நெடுவெண்பாப்' பன்னீரடியின் மிக்கு வராதெனவும், குறுவெண்பா எழுசீரான் இயன்ற இரண்டடியிற் குறைந்து வராதெனவும் வரையறுத்துரைத்தார். உரைப்பவே, நெடுவெண்பாவின் பன்னீரடியிற் பாதியாவது ‘அளவியல் வெண்பா”எனப் பெயர் பெறுதலும், அது நாலடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் பெற்றுவருதலும், குறுவெண்பா மூன்றடியின் மிக்குவராமையும் ஆன்றோர் இலக்கியத்தான் உணரக் கிடக்குமென அச் சூத்திரத்திற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையுரைத்தார். எனவே, தொல்காப்பிய இலக்கணம்பற்றி எழுந்த கடைச்சங்கத்தார் நூல்களின் வெண்பாக்களும் இவ் விலக்கணமே பற்றி ஆக்கப்பட்டனவென்ப தூஉம் பெறப்படும். அற்றேல், மேற்காட்டிய 'களவழி’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/270&oldid=1588727" இலிருந்து மீள்விக்கப்பட்டது