பக்கம்:மறைமலையம் 23.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 நின்றனவுஞ் சிலஉள, அவை: 40, 41 என்னும் இரண்டுமாகும்; ஏனை இருபத்தொன்பதும் இரண்டாம் அடியில் தனிச்சொற் பெற்று முதலிரண்டடியின் முதற்சீரும் இரண்டாம் அடியின் தனிச்சொல்லும் ஓரெதுகையாயும், ஏனையிரண்டடிகளின் முதற்சீர் மற்றோர் எதுகையாயும் வந்தனவாகும். இவ் ன்னிலை' நூல் வெண்பாவின் 1யாப்பமைதி களையும், ‘களவழி’ நூல் வெண்பாவின் யாப்பமைதிகளையுங் கருத்தூன்றி ஒத்துநோக்கவல்லார்க்கு, அவை பெரிதும் ஒற்றுமை யுடையனவாய், ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த வெண்பா இலக்கணத்துள் அடங்கிச், சங்ககாலத்து ஏனைச் சான்றோர் அருளிய நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை முதலிய வற்றோடு ஒப்புமை யுடையனவாய் நிற்றல் தெற்றென விளங்கா நிற்கும் சங்ககாலத்துச் சான்றோர் ஒருநூல் யாக்கு மிடத்து, அந்நூற்பாக்கள் ஓர்ஓசைப்பட ஒரேவகையாய் நடப்பின் அஃது ஓதுவார்க்குங் கேட்பார்க்கும் ஓசையின்பம் பயவாதாகலின், அந்நூற்பாக்களைப் பல்வேறு வகையான் யாத்து ஓசையின்பம் பலபடியான் மாறிமாறி வந்து முதிரவைப்பர். இவர்இவ்வாறு ஓசையின்பம் முதிர்விக்கும் வகைகளை முல்லைப்பாட்டு பட்டினப்பாலை என்பவற்றிற்கு யாம் எழுதிய ஆராய்ச்சி யுரைகளில் விரித்து விளக்கியிருக் கின்றேம். களவழி, இன்னிலை என்பவற்றை ஆக்கிய ஆசிரியரும் ஏனைத் தொல்லாசிரியரோடு ஒப்ப, ஐந்தடி, ஆறடியான் வந்த அளவியல் வெண்பாக் களையும், மூன்றடியான் வந்த குறுவெண்பாக்களையும், ஓர் எதுகைப்படவந்த அளவியல் வெண்பாக்களையும், ஏனை ஈரெதுகைப்பட வந்த அளவியல் வெண்பாக்களின் டை யிடைய மடுத்து, அப்பாக்களின் ஓசைபலவாறு மாறிமாறி நடக்குமாற்றான் ஓசை இன்பம் மேன்மேன் முதிர்ந்து திகழுமாறு வைத்தமை காண்க.

இனித், திருமான்மேல் முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வாரும், களவழி இன்னிலை பாடிய பொய்கை யாரும் ஒருவரேயாயின், மேலே காட்டிய களவழி, இன்னிலை என்பவற்றின் வெண்பா யாப்பமைதிகள் ஒரு சிலவாயினும் பொய்கையாழ்வாரது திருவந்தாதியிற் காணப்படுதல் வேண்டுமன்றோ? ஆழ்வாரது திருவந்தாதியில் உள்ள வெண்பாக்கள் நூறும் நான்கடியான் அமைந்தவை; ‘களவழி,'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/272&oldid=1588729" இலிருந்து மீள்விக்கப்பட்டது