பக்கம்:மறைமலையம் 23.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

268

  • மறைமலையம் - 23

ஞாட்பு, போர்ப்பு, குக்கில், சிரல், உரறி, ஆனாது, கு இ உயங்கும், மைந்து, கடாஅய், நூற, பருமம், சாறு (விழவு),

நளிந்த.திமில், எருவை, திரவு, இங்க.இவை போலும்

அருஞ்சொற்கள் இன்னும் பலஉள இவையெல்லாம் ‘புறநானூறு', ‘அகநானூறு’, ‘கலித்தொகை' முதலான சான்றோரிலக்கியங் களிற் பயில்வனவாகும். இன்னோரன்னவை அருஞ்சொற்களா யிருக்க, இவை தம்மை அங்ஙனங் கொள்ளாத அப் பதிப்புரை காரது கோள் வழுகோளாமென்க. அற்றன்று, கற்றார்க்கும் எளிதிற் பொருள் விளங்காத சொற்களே அருஞ்சொற்களென யாம் கோடுமெனின்; தேவார திருவாசங்களினும் பிற்காலத்து ஆழ்வார்கள் பாடல்களினுங்கூடக் கற்றார்க்கு எளிதிற் பாருள் ளிங்காத சொற்கள் பற்பல உள; அசும்பு, அண்ணிக்கும், அவிதா, அள்ளூறு, ஆதம், இறவு, உண்டை, உந்தீபற, உவலை, தட்டுளுப்பு, ஏசறவு, ஏலோர், ஏழில், தழுத்த, கலதி, கிழியீடு, கிறி,கீறு, குதுகுதுப்பு, குலா, சச்சை, சட்டோ, சழக்கு, சிறவு, செடி(தீமை), தழி, திறவு, தென்ளேணம், நாங்கூழ், பட்டி,பப்பு, பளகு, பனவன், புனிதம், பேழ்கணித்தல், பொத்தை, மாழை, வம்பனேன், வயனம், விதுவிதுப்பு, விளாக்கைத்து என்னுஞ் சொற்கள் 'திருவாசகத்'திற் காணப்படுகின்றன; சங்க இலக்கியங்களிற் பயின்றார்க்கும் இச் சொற்களுக்குப் பொருள் கண்டுதெளிதல் எளிதாகாது; இங்ஙனமே, 'திருச்சிற்றம்பலக் கோவை' யாரினும் அரிதுணர் பொருளனவாஞ் சொற்கள் பலப் பல உள. தேவாரப்பாக்களில் உள்ள பொருள்

ச்

பொள்ளெனப் புலப்படாச் சொற்களையும் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். கற்றார்க்கும் எளிதிற் பொருளுணராலாகாச் சொற்கள் மிகுந்திருத்தல் கொண்டு, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற் பாடப்பட்ட 'திருவாசகத்'தையும் கி.பி.ஆறு, ஏழு, ஒன்பதாம் நூற்றாண்டுகளிற் பாடப்பட்ட தேவாரப்பாக்களையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சங்ககாலத்தில் இயற்றப்பட்டனவென்று கோடல் ஒக்குமோ? கல்வியறிவு சிறிதுடையார்க்கு அருஞ்சொல்லெனத் தோன்றுபவை, அவரின் மிக்க கல்வியும் நுண்ணறிவும் உடையார்க்குஅருஞ்சொல் லெனத் தோன்றா; அவை எளிதிற் பொருள் விளங்குவனவாகவே யிருக்கும். ஆகையால், தமக்கு அருஞ்சொல்லெனத் தோன்றுவது

காண்டு ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/277&oldid=1588734" இலிருந்து மீள்விக்கப்பட்டது