பக்கம்:மறைமலையம் 23.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

279

இனி, அப் பதிப்புரைகாரர் ‘இன்னிலைச்' செய்யுட்கள் சிலவற்றிற்கும், 'முதற்றிருவந்தாதிச்' செய்யுட்கள் சிலவற்றிற்குங் காட்டிய பொருளொற்றுமையும் பொருந்தாதா யிருத்தலின், ஈண்டெத்துக்

அப்

பிழைப்பாட்டினையும்

ன்னனிலை’யின் நாற்பதாஞ் செய்யுளாகிய,

முபாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை முப்பான் மயக்கேழ் பிறப்பாகி - எப்பாலும் மெய்பொருள் தேறார் வெளியோரார் யாண்டைக்கும் பொய்ப்பாலை யுய்வாயாப் போந்து

காட்டுதும்.

என்பது ‘காமவெகுளி மயக்கங்கட்கு இடனாகிய பொருள்களை விரும்புவோர் துன்புறுத்தும் பிறவியை ஒழியாராய், முக்குற்றங்களது மயக்கத்துக்கு ஏதுவாகிய எழுபிறப்புட் பட்டுப், பொய்ப் பகுதியாம் பொருள்களே தாம்எவ்விடத்தும் பிழைத்தற்கு வாயிலாகும் எனக் கருதி வந்து, எவ்விடத்தும் மெய்ப்பொருளைத் தெளியாராகலின் அவ்வியல்பினார் அருள்வெளியை உணரார்” எனப் பொருள் படுகின்றது. இனி அவர்காட்டிய முதற்றிருவந்தாதி ஏழாஞ் செய்யுளாகிய,

திசையுந் திசையுற தெய்வமுந் தெய்வத் திசையுங் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க் கண்ணன் நெடுமால் கடல்கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு

66

தெய்வங்களும்,

அத்

என்பதோ திசைகளின் நிற்குந் தெய்வங்களால் சைவிக்கப்படுஞ் செயல்களும் எல்லாம் மாயோன் தனது மாயையின் வன்மையால் ஆக்கிய மயக்கப் பொருள்கள் ஆகும்" எனப் பொருள் தருகின்றது. முன்னையது, உலகத்துப் பொருள்களிற் பற்றுவைத்தவர்க்குப் பிறவி யொழியாமையும் முதற்பொருளை யுணரும் மெய்யுணர்வு வாயாமையும் அறிவுறத்தா நிற்கப், பின்னையதோ காட்சிப் புலனாவன வெல்லாம் மாயோன் படைத்த மாயை என்று மட்டும் உணர்த்தா நிற்கின்றது. இருவேறு புலவராற் செய்யப்பட்டுப் பொருளொற்றுமை சிறிதுமில்லாத இவ் விருவேறு செய்யுட்களின் றன்மை கல்வியறிவு சிறந்துடையார்க்கும் இனிது விளங்கிக் கிடப்பவும், இவ்விரண்டும் ஒருவராற் செய்யப்பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/288&oldid=1588750" இலிருந்து மீள்விக்கப்பட்டது