பக்கம்:மறைமலையம் 23.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

  • மறைமலையம் - 23

தென்னை? ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகிய திருமந்திரம் என்னுஞ் சைவசித்தாந்த நூல்,

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்

பதியினைப் போற்பசு பாசம் அநாதி

எனவும்,

(159)

பசுப்பல கோடி பிரமன் முதலாப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு

L

பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தாற்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே

(2367)

எனவும் அக் கோட்பாட்டை நன்கெடுத்து மொழிதலின், அது பழைய தமிழர் கோட்பாடாகிய ‘சைவசிந்ததாந்தமே’ யாதல் பெறுதும். திருமந்திரத்தைப்போல், அத்துணைப் பழைமையாகிய வைணவ சித்தாந்த நூல் ஏதேனும் உளதா? ஒன்றும் இல்லையே; அங்ஙனமிருக்க, அக் கோட்பாடு வைணவ மதத்திற்கே உரியதெனத் தமக்குத் தோன்றியவாறு பேசுதல் அப் பதிப்புரைகாரர்க்கு ஏதமாமென அறிக. இவ்வாற்றால் 'இன்னிலை' இயற்றிய பொய்கையாரை வைணவரென்றலும் ஆகாதென உணர்ந்து கொள்க.

அற்றேல், 'இன்னிலை' பாடிய பொய்கையார் அதன் ஒன்று,மூன்று, இருபத்திரண்டாஞ் செய்யுட்களில் மாயோனை உயர்த்துச் சொல்லிய தென்னையெனின்; முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வாரைப்போல், 'இன்னிலை' பாடிய பொய்கையாருந் திருமால் திருவடிக்கண் மெய்யன்புடையவரே யாவர்; அது கொண்டு அவ் விருவரையும் ஒருவரெனக் கூறதல் ஆகாது. அவ்விருவரும வேறு வேறாவர் என்பதனை நாட்டுதற்குரிய சிறந்த ஏதுக்கள் பலவும் மேலெடுத்துக் காட்டின மாதலால், அவர் தம் பெயரொற்றுமையும் அவர் தமக்குள்ள திருமால் திருவடி நேயமும் ஆகிய சில பொது ஏதுக்கள் காண்டு அவ் விருவரையும் ஒருவராகத் துணிதல் பழுதுடைத்தாம். மேலும், 'இன்னிலைச்’ செய்யுட்களிலுள்ள சால்லமைப்புச் சொற்றொடரமைப்புகள் பொருட்டெளி வின்றிக் கருகலாய் நிற்றலும், 'முதற்றிருவந்தாதி'யின் அவ் வமைப்புகள் பொருட்டெளிவுடையவாய் விளங்கி நிற்றலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/291&oldid=1588753" இலிருந்து மீள்விக்கப்பட்டது