பக்கம்:மறைமலையம் 23.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் - 23

காலம்

கரிகாற்பெருவளத் தான் காலம் வரையிலும், பொய்கையார் அவனுக்குப் பின்வந்த சோழன் செங்கணான் வரையிலும் இருந்தாராகற்பாலர் எனவே, ‘களவழி' பாடிய பொய்கையார் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந் தவராக கபிலரது முதுமைக் காலந் தொட்டு, அவர்க்குப்பின் அந் நூற்றாண்டின் இறுதிவரையி லிருந்தமை கண்டுகொள்க.

இனி, ஆழ்வார்கள் எல்லாம் தேவார திருவாசகங்களை நன்கு பயின்றவர்களென்பதற்குச்சான்றாக,அப்பர் ஞான சம்பந்தர் அருளிச்செய்த தேவாரப் பாக்கங்களிலுள்ள "பொன்திகழ மேனியன்”, “புரிசடைப் புண்ணியன்” முதலான சில சொற்றொடர்களைப் பொய்கையாழ்வார் எடுத்தாண்டமை யினையும், தொண்டரடிப் பொடியாழ்வார் 'திருவாசகத்'தின் கண் உள்ள திருப்பள்ளியெழுச்சியையும், திருநாவுக்கரசு நாயனாரின் திருநேரிசையையும் பயின்று அவற்றோடொப்பப் பாடிய வற்றினையும் சூடிக்கொடுத்த நாச்சியார் திருவாசகத்தின் குயிற் பத்தைப் பயின்று அதனோடொப்ப தாம் ஒன்று பாடிய வகையினையும் முன்னமே விளக்கிக் காட்டினாம். இன்னுந் திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி நாயனாருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களின் இறுதிச் செய்யுட்கடோறும் தம் பெயரும் தம் ஊர்ப் பெயருங் கூறித். தாம் சிவபிரான்மேற் பாடிய அப் பதிகங்களை அன்புடன் ஓதுவார் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றுச் சிவபிரான் திருவடியை அடைகுவர் எனப் பயன் உரைத்து வாழ்த்துமாறு போலவே, பெரியாழ்வாரும், அவர் தம் மகள் நாச்சியாரும், குலசேகரப் பெருமாளும், மதுரகவியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாருந் தாம்பாடிய பதிகங்களின் இறுதிப்பாட்டுக் கடோறுந் தம் பெயருந் தம் ஊர்ப்பெயர் முதலியனவும் உரைத்துத் தம்முடைய பதிகங்களைப் பயில்வாரும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்களை யெய்தித் திருமால் திருவடியைச் சேர்குவர் என வாழ்த்துதல் காண்க. அற்றன்று, இவ் வாழ்வார்கள் பாடிய அம் முறையைப் பார்த்தே சைவ சமயாசிரியர் அங்ஙனம் வாழ்த்துரை கூறினார் என்னாமோ வெனின்; என்னாம், என்னை? ஆழ்வார்களுள் முதலாழ்வார் மூவரும் மாணிக்கவாசகர், அப்பர், திருஞான சம்பந்தர்க்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/297&oldid=1588762" இலிருந்து மீள்விக்கப்பட்டது