பக்கம்:மறைமலையம் 23.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

293

என்று திருவாசகத்தும் தேவாரத்தும் அடுத்தடுத்து வருதலைப் பார்த்துத், திருமங்கையாழ்வாரும்,

வானவர் தமக்குச் சேயனாய் அடியேற்

கணியனாய் வந்து

என்று ஓதுதல் காண்க.

இன்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார்,

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக

வந்த காலன்றன் ஆருயிரதனை

வவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன்

எந்தை நீஎனை நமன்றமர் நலியின்

இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்

சிந்தை யால்வந்துன் றிருவடி யடைந்தேன்

செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே

என்றருளிச்செய்த

செய்யுள்

(5, 7, 9)

(திருப்புன்கூர்)

ஓசையினையுஞ்

சொற்பொருள்களையுந் தழுவித் திருமங்கையாழ்வார்,

நஞ்சு சேர்வதோர் வெஞ்சின அரவம்

வெருவி வந்துநின் சரணெனச் சரணாய்

நெஞ்சிற் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக் கடைக்க லங்கொடுத் தருள்செய்த தறிந்து வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்

கொடிய செய்வன உளஅதற் கடியேன் அஞ்சி வந்துநின் அடியிணை அடைந்தேன் அணிபொ ழிற்றிரு அரங்கத்தம் மானே

எனப்பாடினமை காண்க.

(5, 8, 4)

இனித், திருநாவுக்கரசு நாயனார்,

பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ

எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/302&oldid=1588768" இலிருந்து மீள்விக்கப்பட்டது