பக்கம்:மறைமலையம் 23.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் - 23

முத்தனே முதல்வாதில்லை யம்பலத் தாடுகின்ற

6

அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே

(கோயில்) என்றருளிச்செய்த திருநேரிசைப் பதிகத்தின் இசையையுஞ் சொல்நடையையும் ஒப்பவே திருமங்கையாரும், கையிலங் காழிசங்கன் கருமுகில் திருநிறத்தன்

பொய்யிலன் மெய்யன்தன் தாள் அடைவரேல் அடிமையாக்குஞ் செய்யலர் கமலம்ஓங்கு செறிபொழில் தென்திருப்பேர்

பையர வணையாள்நாமம் பரவிநான் உய்ந்தவாறே

என்று பாடினமை ஓர்க.

இன்னும்,

“என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்

(5, 9, 1)

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 8)

என்று மாணிக்கவாசகர் அருளிச்செய்ததைப் பார்த்து

“எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை”

என்றும்,

“எந்தையை எந்தை தந்தை தம்மானை’

என்றும், திருவாசகத்தில்,

(7, 2, 6)

(7.3.3)

66

‘எனக்கு எய்ப்பில் வைப்பே.

(நீத்தல் விண்ணப்பம், 39)

எனப்போந்த சொற்றொடரை யெடுத்து,

“எனக்கு எய்ப்பினில் வைப்பே

என்றுந் திருமங்கையாழ்வார் பாடுதல் காண்க.

(7, 10, 4)

இனித் திருநாவுக்கரசு நாயனார் திருக்கழிப்பாலைப்

பதிகத்தில்,

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே

என்கின் றாளாற்

சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன்

என்கின் றாளாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/303&oldid=1588769" இலிருந்து மீள்விக்கப்பட்டது