பக்கம்:மறைமலையம் 23.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

295

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் அனபவள மேகலையோடு அப்பாலைக் க++ப்பாலன் என்கின் றாளாற்

கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

என்று பாடியிருத்தல் கண்டுகொள்க. இங்ஙனமே இவர் திருவாசகத்திற் போந்த 'கோத்தும்பி' முதலியவைகளைப் பார்த்தும், அப்பர் சுந்தரர் தேவாரப்பதிகங்களைப் பார்த்தும் பாடியவை இன்னும் பற்பல; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டாலுறின் இஃது அளவின்றி விரியுமென அஞ்சி, அவைதம்மை இத்துணையின் நிறுத்து கின்றாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய இவையே மதச் செருக்கில்லாத மெய்யறிவினாரைத் தெருட்டுதற்குப் போதியனவாதலால், இவை காண்டு திருமங்கையாழ்வார், சைவசமயாசிரியர் நால்வர்க்கும் பின்னே இருந்தமை 'தெற்றெனத் துணிந்து கொள்ளப்படும். இங்ஙனஞ் சுந்தரர் மூர்த்தி நாயனார்க்கும் ஒரு நூற்றாண்டு பின்னேயிருந்த திருமங்கையாழ்வார், தமக்கு இருநூற்றைம்ப தாண்டு முற்பட்டிருந்த திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு அவரொடு வழக்கிட்டாரென வைணவர் கட்டிவிட்ட கதைக்கு ஏதொரு சான்றும் எங்கும் இன்மையின், அக்கதை மதச்செருக்காள்றோன்றிய பெரும் களுகுரை யாமென்று தேர்ந்துகொள்க. தாம் வைணவ சமயத்திற்குரியவரா யிருந்தும் நடுவுநிலை பிறழமாட்டாமையிற் சீநிவாச ஐயங்கார் அவர்கள் தம் சமயத்தவர் கட்டிவிட்ட பரும் பொய்க்கதைகளைக் கண்டுபெரிதும் அருவருப்புற்று “வைணவ ஆழ்வார்களைப்பற்றி உண்மையுள்ளதும் நம்பிக்கைக்கு இடமானதும் ஆன குறைந்தது ஒரு வரலாறாவது இருந்ததாயின், இத்தகைய கட்டுரை ஒன்று எழுதுதற்கு ஏதும் கட்டாயம் நேர்ந்திராது”“ என்று தாம் ஒருநூல் எழுதவேண்டிற்றானமைக்கு ஏதுக்கூறினார். பின்னும் அவர் "எமது கருத்திற்குட்பட்டமட்டிற் பெரிய புராணத்திற் சொல்லப்பட்ட உண்மை வரலாறுகளிற் சில பல ஒப்பிட்டுக் காணின் மிகவும் நம்பத்தக்கனவா யிருக்கின்றன. ஏனெனிற், சைவர்கள் தம்முடைய நாயன்மார் இருந்த காலங்களைப் பொய்யாக நீட்டிச் சொல்லவில்லை”7 என்று கூறியதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று. மேலும், மாணிக்கவாசகர் அருளிச்செய்த ருவாசகத்தைப் பயின்றே சூடிக்கொடுத்த நாச்சியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/304&oldid=1588770" இலிருந்து மீள்விக்கப்பட்டது